வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி தொடர்பாக அஞ்சுமன் இண்டெஜாமியா மஸ்ஜித் (ஏ.ஐ.எம்) கமிட்டி மீது முதல் தகவல் அறிக்கை பதிய வேண்டும் என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில், விஷ்வ வைத்திய சனாதன் சங்கத் (விசன்) தலைவர் ஜிதேந்திர சிங் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கியான்வாபி மசூதி வளாகத்தில் உள்ள பகவான் விஷ்வேஷ்வர் கோவிலின் அடிப்படை கட்டமைப்பைச் சேதப்படுத்திய முயற்சியில் ஈடுபட்டதற்காக அஞ்சுமான் இண்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி மற்றும் அதற்குத் தொடர்புடையவர்கள்மீது வழிபாட்டுத் தலங்கள் சட்டம் மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிய வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஜூன் 23 தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.
கியான்வாபி மசூதி விவகாரம்: ஆர்எஸ்எஸ் எனும் சாத்தான் வேதம் ஓதுகிறது
இந்த மனு சிறப்பு தலைமை நீதிமன்ற நடுவரால் நிராகரிக்கப்பட்ட நிலையில், மாவட்ட நீதிபதி விடுப்பில் இருப்பதால், இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி முன்பு தாக்கல் செய்யப்பட்டது.
இதைத் தவிர கியான்வாபி மசூதி வளாகத்தில் சிறுபான்மை சமூகத்தினர் நுழைவதற்கு தடை விதிக்கக் கோரி விவிஎஸ்எஸ் தலைவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இது மனு விரைவு நீதிமன்றத்தில் சிவில் நீதிபதி (மூத்த பிரிவு) மகேந்திர குமார் பாண்டே முன்பாக ஜூலை 8 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
கியான்வாபி வளாகத்தில் உள்ள ஆதி விஷ்வேஷ்வரை வழிபட அனுமதிக் கோரி சிவில் நீதிபதி ரவிக்குமார் திவாகர் நீதிமன்றத்தில் மே 24 ஆம் தேதி இந்த மனுவைத் தாக்கல் செய்யப்பட்டது.
மே 25 ஆம் தேதி மனுவை ஏற்ற நீதிபதி, மனுவை விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார். மே 30 அன்று வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஜூலை 8 ஆம் தேதிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
Source: The New Indian Express
ஷமூக ஆர்வலர்களுக்கு இன்னுமா பத்தல | Rajiv Gandhi Interview | Sumanth C Raman | Rangaraj Pandey
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.