கியானவாபி மசூதியின் ஆய்வுத் தகவல்களை ஊடகங்களுக்கு கசிய விட்டதற்காக ஆய்வுக்குழுவின் ஆணையராக உள்ள வழக்கறிஞர் அஜய் குமார் மிஸ்ராவை அவரது பதவியிலிருந்து நீக்கி வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் இருக்கும் கியானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் இந்து கடவுள்களின் உருவம் இருப்பதால் அதனை, வழிபட உரிமை வேண்டும் என்று 5 பெண்கள் மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இதனை ஏற்ற நீதிமன்றம், மசூதி வளாகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர்கள் குழு ஒன்றை அமைத்தது.
நீதிமன்ற உத்தரவின்படி ஞானவாபி மசூதி வளாகத்திற்குள் மே 14, 15, 16 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ஆய்வு நடைபெற்றது. அதன் அறிக்கையை மே 17 தேதி தாக்கல் செய்யப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நீதிமன்றத்தால் நியமிக்கபட்ட வழக்கறிஞர் அஜய் குமார் மிஸ்ரா, இந்துக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக மசூதி தரப்பினர் குற்றம் சாட்டினர். அவரை மாற்றக் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இதனை ஏற்க மறுத்த நீதிபதி ரவிக் குமார் திவாகர், கூடுதலாக இரண்டு நீதிபதிகளை நியமித்தார்.
ஆனால் வழக்கறிஞர் அஜய் குமார் மிஸ்ரா ஆய்வுத் தகவல்களை சமூக வலைத்தளங்களில் கசிய விட்டதால் அவரை அப்பதவியிலிருந்து நீக்கி வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மற்ற இரு வழக்கறிஞர்களும் ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதற்கு மேலும் 2 நாட்கள் அவகாசம் தருவதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Source : LiveLaw
பாஜகவை திமுக மிகச் சரியாக எதிர்க்கிறது Jenram Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.