Aran Sei

ஞானவாபி மசூதியில் ஆய்வு அறிக்கையை சமர்பிக்க கால அவகாசம் வேண்டும் – நீதிமன்றத்தில் ஆய்வு குழு கோரிக்கை

Credit: NDTV

ஞானவாபி மசூதியின் ஆய்வுப் பணி நேற்று முடிவடைந்துள்ளது. இதன் ஆய்வு அறிக்கை இன்னும் தயாராகவில்லை என்பதால், அறிக்கையைத் தாக்கல் செய்ய கால அவகாசம் கோர ஆய்வுக்கு குழு முடிவு செய்துள்ளது.

ஆய்வு அறிக்கையை செவ்வாய்க்கிழமை (மே 17) தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

“நீதிமன்ற உத்தரவின்படி ஞானவாபி மசூதி வளாகத்திற்குள் மே 14, 15, 16 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்றது. அதன் அறிக்கையை மே 17 தேதி தாக்கல் செய்யப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது” என்று வழக்கறிஞர் அஜய் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.

ஞானவாபி மசூதி: சிவலிங்கம் இருப்பதாக கூறி குளத்தை மூடுவது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் – அகில இந்திய இஸ்லாமியர் தனிநபர் சட்ட வாரியம்

“இருப்பினும், அறிக்கை தயாரிக்கப்படாததால், அதை இன்று (மே 17) தாக்கல் செய்ய முடியவில்லை. நீதிமன்றத்தில் அவகாசம் கோருவோம். நீதிமன்றம் எந்த நேரத்தை சொன்னாலும் அறிக்கையை சமர்பிப்போம்” என்று கூறியுள்ளார்.

காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் இருக்கும் ஞானவாபி மசூதியி வெளிப்புறச் சுவரில் இந்து கடவுள்களின் உருவம் இருப்பதால் வழிபட உரிமை வேண்டும் என்று 5 பெண்கள் மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இதனை ஏற்ற நீதிமன்றம், மசூதி வளாகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர்கள் குழு ஒன்றை அமைத்தது.

ஞானவாபி மசூதி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மவுனம் காப்பது ஏன்? – ஒவைசி கேள்வி

ஆய்வின் போது, மசூதி வளாகத்தின் உள்ளே இருக்கும் நிர் தேகத்தின் அருகே சிவலிங்க காணப்பட்டதாக குழுவின் ஒரு தரப்பினர் தெரிவித்ததை அடுத்து அந்த பகுதிக்குள் யாரும் செல்லாமல் தடுக்கும் வகையில் சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக நீதிமன்றத்தால் நியமிக்கட்ட வழக்கறிஞர் அஜய் குமார் மிஸ்ரா, இந்துக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக மசூதி தரப்பினர் குற்றம்சாட்டினர். அவரை மாற்றக் கோரி மனுத் தாக்கல் செய்தனர். இதனை ஏற்க மறுத்த நீதிபதி ரவி குமார் திவாகர், கூடுதலாக இரண்டு நீதிபதிகளை நியமித்தார்.

இறுதியாக, நீதிமன்றத்தால் நியமிக்கட்ட மூன்று வழக்கறிஞர்கள், இரு தரப்புகளைச் சேர்ந்த தலா 5 வழக்கறிஞர்கள், ஒரு உதவியாளர் மற்றும் ஆய்வை பதிவு செய்யும் வீடியோகிராபி குழுவினர் கொண்டு குழு ஆய்வை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

திமுக பாஜகவை மிகச் சரியாக எதிர்க்கிறது Jenram Interview

ஞானவாபி மசூதியில் ஆய்வு அறிக்கையை சமர்பிக்க கால அவகாசம் வேண்டும் – நீதிமன்றத்தில் ஆய்வு குழு கோரிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்