Aran Sei

கியான்வாபி மசூதி: சிவலிங்கத்தை வழிபடப் போவதாக அறிவித்த இந்து சாமியார் – தடுத்து நிறுத்திய காவல்துறை

வாரணாசியில் உள்ள சாமியாரான சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த், “இன்று (ஜூன் 4) கியான்வாபி மசூதியில் உள்ள சிவலிங்கத்தில் நானும் எனது சீடர்களும் பிரார்த்தனை செய்வார்கள்” என்று நேற்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து வாரணாசி சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதியின் சீடரான சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த், 70 பேருடன் கியான்வாபி மசூதிக்கு சென்று சிவலிங்கத்தை பிரார்த்தனை செய்யப் போவதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் வாரணாசி காவல்துறையினர் அவிமுக்தேஸ்வரானந்துக்கு கியான்வாபி மசூதிக்குச் செல்ல அனுமதி வழங்கவில்லை. காவல்துறையினர் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்தரை அவரது வித்யா மடத்தின் வாயிலில் தடுத்து நிறுத்தினர். மேலும் ஆசிரமத்தின் நுழைவாயிலில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

வாரணாசி நீதிமன்றம் பிளவுபடுத்தும் அரசியலை ஆதரித்தது: கியான்வாபி மசூதி விவகாரம் குறித்து ஜாமியத் உலமா இ ஹிந்த் கருத்து

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் இருக்கும் கியான்வாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் இந்து கடவுள்களின் உருவம் இருப்பதால் அதனை, வழிபட உரிமை வேண்டும் என்று 5 பெண்கள் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இதனை ஏற்ற நீதிமன்றம், மசூதி வளாகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர்கள் குழு ஒன்றை அமைத்தது. இக்குழுவின் விசாரணையில் மசூதியின் தண்ணீர் தொட்டிக்குள் சிவலிங்கம் இருந்தது என்று கூறப்பட்டதால், அந்த தண்ணீர் தொட்டியை யாரும் பயன்படுத்தாத வகையில் அதற்குச் சீல் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source : india today

கண்ணீர்விடும் Kashmiri Pandit கள் கண்டுகொள்ளாத Amit Shah | Thiyagu Interview

கியான்வாபி மசூதி: சிவலிங்கத்தை வழிபடப் போவதாக அறிவித்த இந்து சாமியார் – தடுத்து நிறுத்திய காவல்துறை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்