Aran Sei

உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே கியானவாபி மசூதி விவகாரத்தை பாஜக எழுப்புகிறது: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

ண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே கியானவாபி மசூதி விவகாரத்தை பாஜகவும் அதன் கூட்டாளிகளும் எழுப்புகிறார்கள் என்று உத்திரபிரதேச மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் நேற்று (மே 17) தெரிவித்துள்ளார்,

கியானவாபி மசூதி பழமையானது. மக்களின் முக்கியப் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவே, பாஜகவின் “கண்ணுக்குத் தெரியாத கூட்டாளிகள்” அவ்வப்போது வெளியே வந்து வெறுப்பு விதைகளை விதைக்கின்றனர், அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

முக்கியமான பிரச்சினைகள் பேசப்படாமல் இருப்பதற்காக இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே பாஜக வெறுப்பைப் பரப்புகிறது” என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

‘கிறிஸ்தவ தேவாலயங்களை புல்டோசரால் இடித்துத் தகர்க்க வேண்டும்’ – ஸ்ரீராம் சேனா தலைவரின் கருத்துக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

உத்தரபிரதேசத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற புல்டோசர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் கட்டப்பட்ட மருத்துவமனையை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திறந்து வைக்கிறார்.

Source : newindianexpress

பாஜகவை திமுக மிகச் சரியாக எதிர்க்கிறது Jenram Interview

உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே கியானவாபி மசூதி விவகாரத்தை பாஜக எழுப்புகிறது: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்