சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்றைய தினம் (14.01.21), துக்ளக் இதழின் 51வது ஆண்டு விழா நடைபெற்றது. ஹெச்.ராஜா, மாஃபா பாண்டியராஜன், மைத்ரேயன் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்துக்கொண்ட இந்த விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
இந்த விழாவில் பேசிய துக்ளக்கின் ஆசிரியர் குருமூர்த்தி, ” தமிழக அரசியல் காமெடி அரசியலாக மாறிவிட்டது. திமுகவும், அதிமுகவும் ஊழல் கட்சிகளே. திமுக குடும்ப ஊழல், அதிமுக கூட்டு ஊழல்” என்று கூறியிருக்கிறார்.
முன்னதாக, “வீடு பற்றி எரிகிறது கங்கை ஜலத்திற்கு நாம் காத்துக்கொண்டிருக்க முடியாது, நாம் சாக்கடை ஜலத்தையும் வாரி வீசுவோம்” என்று அருண் செளரி கூறியிருந்ததை மேற்கோள் காட்டிய அவர் “திமுகவை வீழ்த்த சசிகலாவாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் கங்கை ஜலத்துக்கு காத்திருக்காமல் எல்லா ஜலத்தையும் ஏற்றுக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது” என்றும் குருமூர்த்தி கூறியுள்ளார்.
இந்நிலையில், சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை குருமூர்த்தி எடுத்தது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் சசிகலாவை தொடர்ந்த ஆதரித்து வரும் சுப்ரமணிய சுவாமியிடம் ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தார்.
Gurumoorthy came to support Sasikala much after I did. Till yesterday he was for Rajnikant. That was a fiasco for him. Rajnikant understood the game. Now as a political parasite “Guruji” is looking for blood elsewhere
— Subramanian Swamy (@Swamy39) January 15, 2021
இதற்கு பதிலளித்த சுப்ரமணியன் சுவாமி தன் ட்விட்டர் பக்கத்தில் , ”நான் சசிகலாவுக்கு ஆதரவு அளிக்க தொடங்கியதற்கு பின்னர் தான் குருமூர்த்தி ஆதரவு தெரிவிக்க வந்துள்ளார். நேற்று வரை அவர் (குருமூர்த்தி) ரஜினிகாந்திற்கு ஆதரவு தெரிவித்தார். அது அவரை படுதோல்வியில் தள்ளியது. ரஜினிகாந்த் குருமூர்த்தியின் விளையாட்டை புரிந்துக் கொண்டார். இப்போது ஒரு அரசியல் ஒட்டுண்ணியாக இருக்கும் ”குருஜி“ ரத்தம் குடிக்க மற்றோரு இடத்தை தேடிக் கொண்டிருக்கிறார்” என்று பதிலளித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா இந்த மாதம் 27 ஆம் தேதி விடுதலையாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.