Aran Sei

குஜராத்: ‘வந்தே பாரத்’ ரயிலை சேதப்படுத்திய இறந்த எருமை மாடுகளின் உரிமையாளர்கள் மீது காவல்துறை எப்ஐஆர் பதிவு

ருமை மாடுகள் மீது மோதியதில் வந்தே பாரத் ரயிலின் முற்பகுதி சேதமடைந்த நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த எருமை மாடுகளின் அடையாளம் தெரியாத உரிமையாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று (அக்டோபர் 06) வந்தே பாரத் ரயில் வத்வா மற்றும் மணிநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே பயணம் செய்துகொண்டிருந்தபோது, தண்டவாளத்தில் வழிதவறி வந்த நான்கு எருமை மாடுகள் மீது ரயில் மோதியதால், இன்ஜினின் முற்பகுதி சேதமடைந்தது. அதேநேரம், விபத்தில் சிக்கிய எருமைகள் உயிரிழந்தன.

குஜராத்: பொதுவெளியில் இஸ்லாமியர்களை கட்டி வைத்து அடித்த காவல்துறை – மனித உரிமை ஆணையத்தில் திரிணாமூல் காங்கிரஸ் புகார்

இந்த நிலையில், எருமை மாடுகளின் உரிமையாளர்கள் மீது ரயில்வே காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். எனினும், அவர்கள் இதுவரை எருமை மாடுகளின் உரிமையாளர்களை அடையாளம் காணவில்லை எனத் தெரிகிறது. அதற்கான முயற்சிகளை அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் தடத்தில் குறுக்கிட்ட எருமைகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள தகவலை மேற்கு ரயில்வேயின் அகமதாபாத் பிரிவு செய்தித்தொடர்பாளர் உறுதி செய்தார். 1989 ரயில்வே சட்டம், பிரிவு 147-ன் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சேதமடைந்த ரயிலின் முகப்பு சீர் செய்யப்பட்டு, மீண்டும் சேவையை வந்தே பாரத் ரயில் தொடங்கியுள்ளது.

மேலும், வரும் நாட்களில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க அனைத்து வழிகளையும் ரயில்வே முன் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : india today

தடை செய்ய வேண்டியது ஆர்.எஸ்.எஸை தான் | கம்பு திரிசூலத்தோடு எதுக்கு ஊர்வலம் | Velmurugan | RSS | BJP

குஜராத்: ‘வந்தே பாரத்’ ரயிலை சேதப்படுத்திய இறந்த எருமை மாடுகளின் உரிமையாளர்கள் மீது காவல்துறை எப்ஐஆர் பதிவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்