இந்தியப் பிரதமருக்கு எதிராக ட்வீட் செய்ததாகக் கூறி குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானியை அசாம் காவல்துறையினர் கைது செய்தது சர்வாதிகார நடவடிக்கை என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் இன்று (ஏப்ரல் 23) கண்டனம் தெரிவித்துள்ளார்.
அசாம்: ஜிக்னேஷ் மேவானியின் கைதைக் கண்டித்து காங்கிரஸார் போராட்டம்
ஒன்றிய மற்றும் பாஜக அரசுகளின் இந்த சர்வாதிகார போக்கு ஜனநாயகத்தின் மீது களங்கம் ஏற்படுத்துகின்றது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது” என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் பலன்பூரிலிருந்து, அம்மாநில சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி அசாம் காவல்துறையினரால் ஏப்ரல் 20 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
ராஷ்ட்ரிய தலித் அதிகார மஞ்ச் என்ற அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை என்று அவரின் உதவியாளர் கூறியிருந்தார்.
பின்னர், அவரின் ட்விட்டர் பதிவுக்காகக் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். இதற்குக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார்.
பின்னர், கைது குறித்துப் பேசிய ஜிக்னேஷ் மேவானி, ”நம் நாட்டில் மத ஒற்றுமையை உடைக்க முயற்சிகள் நடப்பதால், இச்சூழ்நிலைக்கு ஏற்ப அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று அந்த ட்வீட்டில் கூறி இருந்தேன். அமைதியை நிலைநாட்ட வேண்டும் என நான் கோரியதற்கு என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இச்செயல் அரசின் உண்மையான முகத்தைக் காட்டுகிறது” என்று கூறியிருந்தார்.
கைதுக்குப் பிறகு அசாம் நீதிமன்றத்தில் ஜிக்னேஷ் மேவானி ஆஜர் படுத்தப்பட்டார். அவரின் பிணை மனுவை நிராகரித்த நீதிமன்றம், அவரை மூன்று நாள் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளக் காவல்துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
Source : newindianexpress
பாஜகவை எதிர்த்திருந்தால் இளையராஜாவின் பின் தமிழ்நாடு திரண்டிருக்கும்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.