Aran Sei

பிரதமர் மோடி தொடர்பான ட்விட்டர் பதிவு – குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு பிணை வழங்கிய அசாம் நீதிமன்றம்

பிரதமர் மோடி தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்ட வழக்கில் குஜராத் மாநில சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானிக்கு அசாம் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

ஜிக்னேஷ் மேவானிக்கு எதிராக அசாம் மாநில பாஜக பிரமுகர் புகார் அளித்ததன் பெயரில், கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 21) குஜராத்தின் பலன்பூர் பகுதியில் வைத்து அசாம் காவல்துறையினர் அவரைக் கைது செய்திருந்தனர்.

மேவானியின் பிணை மனுவை விசாரித்திருந்த அசாம் நீதிமன்றம், அவருக்குப் பிணை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

அசாம்: ஜிக்னேஷ் மேவானியின் கைதைக் கண்டித்து காங்கிரஸார் போராட்டம்

கைது நடவடிக்கை பிரதமர் அலுவலகத்தின் பழிவாங்கும் செயல் என்று தெரிவித்துள்ள ஜிக்னேஷ் மோவானி, “இது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் சதி. எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே அவர்கள் இதை செய்துள்ளார்கள். முதலில் ரோஹித் வெமுலாவிற்கு செய்தார்கள். அடுத்து சந்திரசேகர் ஆசாத்திற்கு செய்தார்கள், தற்போது என்னை குறிவைக்கிறார்கள்” என்று மேவானி தெரிவித்துள்ளார்.

கிரிமினல் சதி, மத உணர்வுகளை புண்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம், ஆத்திரமூட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தப்பட்டுள்ளது.

ஜிக்னேஷ் மேவானி கைது: பிரதமரை விமர்சிக்கவே கூடாதா? அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி நடைமுறையில் உள்ளதா? – திருமாவளவன் கேள்வி

”1995 ஆண்டு முதல் குஜராத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு புகார் வந்த 24 மணிநேரத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.” என்று ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார்.

ஜிக்னேஷ் மேவானி கைது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “அரசு இயந்திரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் நீங்கள் அதிருப்தியை நசுக்கலாம். ஆனால், நீங்கள் உண்மையைச் சிறைபடுத்த முடியாது” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு பிணை நிராகரிப்பு – 3 நாள் போலீஸ் காவலில் வைக்க அசாம் நீதிமன்றம் உத்தரவு

பனஸ்கந்தாவின் வட்காம் தொகுதியின் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினரான மேவானி, வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட போவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: NDTV

தனியார்மயத்தினால் கொழுக்கும் முதலாளிகள் –

அதிர்ச்சியளிக்கும் Oxfam அறிக்கை

பிரதமர் மோடி தொடர்பான ட்விட்டர் பதிவு – குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு பிணை வழங்கிய அசாம் நீதிமன்றம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்