குஜராத் மாநிலம் பலன்பூரில் இருந்து, அம்மாநில சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி அசாம் காவல்துறையினரால் நேற்றிரவு (ஏப்ரல் 20) கைது செய்யப்பட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து அகமதாபாத் அழைத்துச் செல்லப்பட்ட அவர், இன்று (ஏப்ரல் 21) அசாமுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.
ராஷ்ட்ரிய தலித் அதிகார மஞ்ச் என்ற அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டதற்கான காரணம் இன்னும் தெளிவாகக் கூறப்படவில்லை.
தங்களுக்கு இதுவரை எஃப்ஐஆரின் நகல் வழங்கப்படவில்லை என்று ஜிக்னேஷ் மேவானியின் உதவியாளர்கள் கூறியுள்ளனர்.
ஜிக்னேஷ் மேவானியை கைது செய்த அசாம் காவல்துறை, இன்று அவரை அகமதாபாத்தில் இருந்து கவுகாத்திக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
குஜராத் மாநில வட்காம் சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி, முன்னாள் பத்திரிகையாளர் ஆவார். சுயேச்சை எம்எல்ஏவான இவர், காங்கிரசுக்கு தனது ஆதரவை அளித்து வருகிறார்.
Source: NDTV
ஆளுநருக்குக் கறுப்பு கொடி காட்டிய விவகாரம் – விளக்கமளிக்கிறார் ஜெயராமன்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.