Aran Sei

குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு பிணை நிராகரிப்பு – 3 நாள் போலீஸ் காவலில் வைக்க அசாம் நீதிமன்றம் உத்தரவு

Credit: The Wire

பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக அசாம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானியின் பிணையை அசாம் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும், அவரை மூன்று நாள் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள காவல்துறைக்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜிக்னேஷ் மேவானி அவரது ட்விட்டர் பக்கத்தில், “காந்தியைக் கொன்ற கோட்சேவை கடவுளாக பிரதமர் மோடி கருதுகிறார். குஜராத்தில் நடக்கும் வகுப்புவாத மோதல்களுக்கு எதிராக அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு பிரதமரிடம் மக்கள்  வேண்டுகோள் விடுக்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

‘கோட்ஸேவை பிரதமர் மோடி கடவுளாக பார்க்கிறார்’ எனும் ஜிக்னேஷ் மேவானியின் ட்வீட்டினால் அவரை கைது செய்துள்ளோம்: அசாம் காவல்துறை தகவல்

இது தொடர்பாக அசாமில் தன்னாட்சி பெற்ற போடோலாந்து பிராந்திய கவுன்சில் பாஜக நிர்வாகி அனுப் குமார் டே அளித்த புகாரில் பெயரில், ஏப்ரல் 20 தேதி குஜராத்தின் பாலன்பூரில் உள்ள சர்க்யூட் ஹவுஸில் இரவு 11:30 மணியளவில் ஜிக்னேஷ் மேவானியை அசாம் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த ஜிக்னேஷின் உதவியாளர், “ஜிக்னேஷை கைது செய்ய வந்திருந்த காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை நகலை எடுத்து வரவில்லை. எந்தக் குற்றச்சாட்டிற்காக கைது என்று காரணமும் கூறப்படவில்லை. அகமதாபாத் விமான நிலையத்தில் காங்கிரஸ் ஆதரவாளர்கள் குழு சலசலப்பை ஏற்படுத்திய பிறகு தான் கைதிற்கான காரணம் தெரியவந்தது” என்று கூறியுள்ளார்.

ஜிக்னேஷ் மேவானியை கைது செய்திருப்பது ஜனநாயக விரோதம் – ராகுல் காந்தி கருத்து

ஜிக்னேஷ் மேவானியின் கைது செய்திருப்பதற்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர், சமூக செயல்பாட்டாளர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Source: The Wire

இந்தியாவில் செயற்கை மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறதா? உண்மை என்ன? – தமிழ்நாடு மின் பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் சா. காந்தி விளக்கம்

 

குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு பிணை நிராகரிப்பு – 3 நாள் போலீஸ் காவலில் வைக்க அசாம் நீதிமன்றம் உத்தரவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்