குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தேர்தெடுக்கப்பட்ட புதிய சட்டமன்ற உறுப்பினர்களில் 40 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் குஜராத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
கட்சிவாரியாகப் பார்க்கிறபோது, பாஜகவில் 26 பேர், காங்கிரசில் 9 பேர், ஆம் ஆத்மியில் 2 பேர், சுயேச்சைகளில் 2 பேர், சமாஜ்வாதி கட்சியின் ஒரு சட்டமன்ற உறுப்பினர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
இவர்களில் 29 பேர் மீது கொலை முயற்சி, பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட வழக்குகள் இருக்கின்றன. இந்த 29 பேரில் 20 பேர் பா.ஜ.க.வினர், 4 பேர் காங்கிரஸ் கட்சியினர், 2 பேர் ஆம் ஆத்மி கட்சியினர், 2 பேர் சுயேச்சைகள், ஒருவர் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.
முந்தைய சட்டசபை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 47 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Source : the hindu
Trichy Suriya Hints | Annamalai would be sacked from BJP | | Era Kumar | TN BJP | Amarprasad Reddy
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.