Aran Sei

குஜராத்: தலித் மணமக்களின் திருமண ஊர்வலத்தில் டிஜே இசைத்ததால் ஆதிக்கச் சாதியினர் தாக்குதல் – 6 பேர் மீது வழக்கு பதிவு

குஜராத்தில் உள்ள அகமதாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் டிஜே மியூசிக் (DJ Music) சிஸ்டத்தில் பாடல்களை இசைத்ததால் தலித் மணமகளின் ஊர்வலத்தைத் தாக்கியதாக ஆறு பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தின் டெட்ரோஜ் தாலுகாவில் உள்ள தங்கர்வா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனது மகளின் திருமணத்தை கொண்டாடுவதற்காக இந்த ஊர்வலத்தை ஜகதீஷ் பர்மர் ஏற்பாடு செய்திருந்தார் என்று டெட்ரோஜ் காவல் நிலையத்தின் காவல்துறை உதவி ஆய்வாளர்  எச்.ஆர். படேல் கூறியுள்ளார்.

எலான் மஸ்க் கருத்துச் சுதந்திர போராளியா? – மு. அப்துல்லா

கிராமத்தில் ஒரு இடத்தை ஊர்வலம் அடைந்தபோது, ​​வேரொரு சமூகத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் டிஜே ஆபரேட்டரிடம் பாடல்களை இசைக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். அவர் மறுத்ததால், ஊர்வலத்தில் இருந்தவர்களை அவர்கள் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில்  மணமகளின் தந்தை காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அஜ்மீர்: கியான்வாபி மசூதியைத் தொடர்ந்து தர்காவை குறிவைத்துள்ள இந்துத்துவாவினர்

வன்முறையில் ஈடுபட்ட ஆறு பேர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 323 (தாக்குதல்), 146 (கலவரம்) மற்றும் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்று டெட்ரோஜ் காவல் நிலையத்தின் காவல்துறை உதவி ஆய்வாளர்  எச்.ஆர். படேல் கூறியுள்ளார்.

Source: Thenewindianexpress

மேடையிலேயே சம்பவம் செய்த ஸ்டாலின் R Vijaya Sankar Interview

குஜராத்: தலித் மணமக்களின் திருமண ஊர்வலத்தில் டிஜே இசைத்ததால் ஆதிக்கச் சாதியினர் தாக்குதல் – 6 பேர் மீது வழக்கு பதிவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்