Aran Sei

‘இந்தப் பொற்கால ஆட்சியில் மதமாற்றத்திற்கு எதிரான சட்டங்கள் இயற்றப்படும்’ – குஜராத் முதல்வர் விஜய் ருபனி

வ் ஜிகாந்திற்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும் என்று குஜராத் மாநில முதல்வர் விஜய் ருபனி தெரிவித்துள்ளார்.

நேற்று (பிப்பிரவரி 14), குஜராத் மாநிலம் வடோடராவில் மாநகராட்சி தேர்தலுக்கான பிரச்சாரத்தில், பாஜகவை சேர்ந்த அம்மாநில முதல்வர் விஜய் ருபனி கலந்துக்கொண்டு பேசியுள்ளார்.

அப்போது, “நாங்கள் சட்டசபையில், லவ் ஜிகாந்திற்கு எதிராகச் சட்டம் இயற்றவுள்ளோம். லவ் ஜிகாத் என்ற பெயரில் நடப்பவைகளை எங்களால் சகித்துக்கொள்ள முடியாது. பாஜக தலைமையிலான குஜராத் அரசானது, வரும்நாட்களில் இதற்கு எதிராகக் கடுமையான சட்டங்களை இயற்றும்.” என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

லவ் ஜிகாத் வதந்தி – காவல்துறையால் சித்திரவதை செய்யப்பட்ட இஸ்லாமியத் தம்பதியர்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, 370 வது பிரிவை அகற்றுவது, புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுப்பது போன்ற மத்திய அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது என்றும் பாஜக பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை ஆட்சி செய்யும் போதுதான், குஜராத் வளர்ச்சியின் பொற்காலத்தை காண முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில், பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரபிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் திருமணத்திற்காக மதம் மாறுவதை தடுக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டன.

`லவ் ஜிகாத் தடைச் சட்டம் நீதியை மீறும் செயல்’ – முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி

அண்மையில், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி லோகூர், திருமணத்திற்காக மதம் மாறுவதைத் தண்டனைக்குரிய குற்றம் என அறிவிக்கும் உத்தரப்பிரதேச அரசின் மசோதாவானது, மதத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் பின்னுக்குத் தள்ளும் செயல் என்று விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : PTI

 

‘இந்தப் பொற்கால ஆட்சியில் மதமாற்றத்திற்கு எதிரான சட்டங்கள் இயற்றப்படும்’ – குஜராத் முதல்வர் விஜய் ருபனி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்