2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தின் போது கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 11 பேரை பாஜக அரசு விடுவித்துள்ளது.
குற்றவாளிகளை விடுவிப்பது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 11 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்லாமியர்களை கொன்ற குற்றவாளிகளை விடுதலை செய்த குஜராத் அரசு – எஸ்.டி.பி.ஐ கண்டனம்
2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதியன்று, பில்கிஸ் பானு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டது, அவரின் குடும்பத்தினர் 14 பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக குற்றவாளிகளான 11 பேருக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.
குற்றவாளிகள் 15 வருடங்கள் சிறையில் கழித்த பின், அதில் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் முன்னதாக விடுதலை செய்யப்பட வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.
பெகசிஸ் விவகாரம் – வழக்கை மறுபடியும் விசாரிக்க இருக்கும் உச்சநீதிமன்றம்
அதன்பின் உச்ச நீதிமன்றம் இதுகுறித்து கருத்தில் கொள்ளுமாறு குஜராத் அரசை கேட்டுக் கொண்டது. பின் குஜராத் அரசு கமிட்டி ஒன்றை உருவாக்கியது. இந்த கமிட்டிக்கு பஞ்ச்மஹால் ஆட்சியர் சுஜல் மயாட்ரா தலைமை தாங்கினார்.
குற்றவாளிகளும் 11 பேரும் விடுவிக்கப்பட்டது குறித்து பேசிய பஞ்ச்மஹால் ஆட்சியர் சுஜல் மயத்ரா, “சில மாதங்களுக்கு முன்பு கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டு இவர்களை விடுவிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அந்த முடிவு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது” என்று தெரிவித்தார்.
நித்தியானந்தா மாதிரி தனி இந்து நாடா? Aransei Debate | Hindu Rashtra vs India | Senthil | Magizhnan
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.