குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து புதிதாக பதவியேற்ற 16 அமைச்சர்களில் 16 பேர் பெரும் பணக்காரர்கள் மற்றும் அவர்களில் 4 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.
குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து அங்கு பூபேந்திர படேல் டிசம்பர் 12-ம் தேதி மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்றார்.
அவருடன் 16 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களில் 8 பேர் கேபினட் அந்தஸ்து அமைச்சர்கள் ஆவார்கள். 2 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்கள், 6 பேர் ராஜாங்க அமைச்சர்கள் ஆவார்கள்.
புதிய அமைச்சர்களில் 4 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மீன்வளத்துறை ராஜாங்க அமைச்சர்கள் பர்சோத்தம் சோலங்கி மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 420 மற்றும் 465-ன் கீழ் மோசடி வழக்கு உள்ளது.
அமைச்சர்கள் ஹர்ஷ் சங்கவி, ருஷிகேஷ் படேல், ராகவ்ஜி படேல் ஆகியோர் மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவுகள் 188, 500-ன் கீழ் பொது ஒழுங்குக்கு கீழ்ப்படியாமை மற்றும் அவதூறு வழக்குகள் உள்ளன.
புதிய அமைச்சரவையில் முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்பட 16 பேர் பெரும் பணக்காரர்களாக உள்ளனர். புதிய அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.32.7 கோடி. (முந்தைய அமைச்சரவையில் அமைச்சர்காலிப் சராசரி சொத்து மதிப்பு ரூ.3.95 கோடிதான்).
பணக்கார அமைச்சர்களில் முதல் இடம் பிடித்திருப்பவர் பல்வந்த்சிங் ராஜ்புத். இவரது சொத்து மதிப்பு ரூ.372.65 கோடி ஆகும். 16 அமைச்சர்களில் மிகக்குறைந்த சொத்துகளை உடையவர் பாச்சுபாய் காபத் ஆவார். இவரது சொத்து மதிப்பு ரூ.92.85 லட்சம்தான்.
6 அமைச்சர்கள் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள். 8 அமைச்சர்கள் பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படித்தவர்கள். 3 அமைச்சர்கள் பட்டயப்படிப்பு படித்தவர்கள். முதலமைச்சர் பூபேந்திர படேலும் சிவில் என்ஜினீயரிங்கில் பட்டயப்படிப்பு படித்தவர்தான்.
நிர்மலாவின் வெங்காய வெறுப்பு | ஒட்ட நறுக்கிய தமிழக எம்.பிக்கள் | Aransei Roast | Nirmala Sitharaman
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.