ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் ஒன்றிய, மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என்றும் சட்டம் இயற்றுவதில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சம உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியா முழுவதும் விதிக்கப்படும் பல்வேறு வரிகளை ஒன்றிணைந்து சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயை மாநில அரசுகளுடன் ஒன்றிய அரசு பகிர்ந்துக் கொள்கிறது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை, அதில் மாற்றங்கள், நிலுவைத் தொகை தொடர்பாக பரிந்துரைகளை வழங்க ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டது. பொருட்களின் வரியைக் கூட்டுவது, குறைப்பது, நீக்குவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கவுன்சிலில் ஒன்றிய அரசின் நிதியமைச்சர் மற்றும் மாநில அரசுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
கடல் சரக்குகள் மீதான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியை ரத்து செய்த குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ”இந்தியாவில் ஜனநாயகமும் கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கின்றன. ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைக்கு மதிப்பு மட்டுமே உண்டு. ஜிஎஸ்டி கவுன்சில் அறிவுரைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்க வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் ஒன்றிய, மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது.” என்று தெரிவித்துள்ளது.
”ஜிஎஸ்டி விவகாரத்தில் சட்டங்களை இயற்ற ஒன்றிய, மாநில அரசுகளுக்குச் சம உரிமை உண்டு. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளை கட்டுப்படுத்தினால், நாட்டின் கூட்டாட்சியை பாதிக்கும்” என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
Source: The Hindu Tamil
Subramanian Swamy யை கேள்வி கேக்கும் தைரியம் Congress க்கு இருக்கா? Haseef | Congress Protest | BJP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.