இந்தியாவில் ஜி.எஸ்.டி மூலம் கிடைக்கும் வருவாய் கடந்த டிசம்பர் மாதம் உட்பட கடந்த 6 மாதமாக 1 லட்சம் கோடிக்கு மேல் இருந்துள்ளது.
கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜி.எஸ்.டி வருவாய் டிசம்பர் மாதத்தில் 1,29,780 கோடியாக இருந்துள்ளது. இது 2019 டிசம்பர் மாதத்தை விட 26% மற்றும் 2020 டிசம்பர் மாதத்தை விட 13% அதிகமாக இருந்துள்ளது.
“நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில் சராசரி மாத ஜிஎஸ்டி வசூல் 1.30 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது முதல் மற்றும் இரண்டாவது காலாண்டில் முறையே 1.10 லட்சம் கோடி மற்றும் ரூ.1.15 லட்சம் கோடியாக இருந்துள்ளது.
கடந்தாண்டு டிசம்பரை விட இந்தாண்டு டிசம்பரில் இறக்குமதி பொருட்களின் வருவாய் 36% அதிகமாக இருந்துள்ளது. அதே சமயம் உள்நாட்டுப் பரிவர்த்தனைகளின் வருவாய் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தை விட 5% அதிகமாகும்.
உள்நாட்டுப் பரிவர்த்தனைகளின் வருவாய் அதிகரித்திருந்த போதிலும் பல்வேறு மாநிலங்களில் வருவாய் குறிப்பிடத்தக்க அளவு மாறியுள்ளது. அவ்வகையில் தமிழ்நாட்டில் வருவாய் 4% குறைந்துள்ளது மற்றும் ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் வருவாய் 2% குறைந்துள்ளது.
மேற்கு வங்கம் மற்றும் பீகார் ஆகியவற்றின் வருவாய்10% குறைந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் 11% வருவாய் வளர்ச்சியைக் கண்டது. கர்நாடகாவின் வருவாய் அதிகபட்சமாக 12% அதிகரித்துள்ளது.
Source : TheHindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.