பேச்சுரிமையும், அமைதிவழியில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையும் சமரசம் செய்து கொள்ள முடியாத மனித உரிமைகள் என்று திஷா ரவி கைது குறித்து சூழலியல் செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி, பெங்களூருவைச் சேர்ந்த 21 வயதான சூழலியல் செயல்பாட்டாளர் தீஷா ரவியை, டெல்லி காவல்துறை கைது செய்தது.
ஸ்வீடனைச் சேர்ந்த சூழலியல் செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க், இந்தியாவில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு வழிகாட்டும், “டூல்-கிட்” (தகவல் தொகுப்பு) ஒன்றை பகிர்ந்திருந்தார்.
கிரேட்டா துன்பெர்க், மீனா ஹாரிஸ், ரிஹான்னா படங்களை எரித்து ஆர்ப்பாட்டம் – யுனைட்டட் ஹிந்து முன்னணி
அந்தத் தொகுப்பை, திருத்தம் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் திஷா. அதையடுத்து, இந்திய அரசுக்கு எதிராகச் சதித்திட்டம் மற்றும் காலிஸ்தான் இயக்கத்தில் பங்கு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக, திஷா ரவியை டெல்லி காவல்துறை விசாரிக்க வழங்கப்பட்டிருந்த 5 நாள் போலீஸ் காவல் நேற்று (பிப்பிரவரி 19) முடிவடைந்தது. இதையடுத்து, டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, மூன்று நாள் நீதிமன்ற காவலில் வைக்க, கூடுதல் தலைமை நீதிபதி ஆகாஷ் ஜெயின் உத்தரவிட்டார்.
ட்விட்டரில் வைரலாகும் ”தீஷா ரவி ஜோசப்” – இந்துவா? அல்லது கிறிஸ்துவரா? என்பதே அபத்தம்
இந்நிலையில், இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கிரேட்டா துன்பெர்க் கருத்து தெரிவித்துள்ளார். அதில், பேச்சு உரிமையும், அமைதிவழியில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையும், அதற்காக ஒன்றுக்கூடுவதும் சமரசம் செய்துக்கொள்ள முடியாத மனித உரிமைகள் என்று கூறியுள்ளார்.
Freedom of speech and the right to peaceful protest and assembly are non-negotiable human rights. These must be a fundamental part of any democracy. #StandWithDishaRavi https://t.co/fhM4Cf1jf1
— Greta Thunberg (@GretaThunberg) February 19, 2021
மேலும், இவையெல்லாம் ஜனநாயகத்தின் அடிப்படைகள் என்று குறிப்பிட்ட அவர், அத்துடன், #StandWithDishaRavi என்ற ஹேஷ்டாக்கையும் சூழலியல் செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க் இணைத்துள்ளார்.
தீஷா ரவி தாக்கல் செய்திருக்கும் பிணை மனு, இன்று (பிப்ரவரி 20) விசாரணைக்கு வரவுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.