Aran Sei

”மகிழ்ச்சியான முதியவர்” – ட்ரம்பை கேலி செய்த கிரேட்டா துன்பர்க்

மெரிக்காவின் புதிய அதிபராக, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன், நேற்று பதவியேற்றுள்ளார். அதற்கு முன்பாக, அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற டிரம்ப், வெள்ளை மாளிகையை விட்டு அமைதியாக வெளியேறி, தனி விமானத்தில் புளோரிடாவுக்கு பறந்தார்.

ஏற்கெனவே ட்ரம்ப் ஆதரவாளர்கள், பைடனின் வெற்றியை எதிர்த்து வன்முறையில் ஈடுபட்டதால், பதவியேற்பு நிகழ்ச்சியை பலத்த பாதுகாப்புக்கிடையில் ஏற்பாடு செய்திருந்தது அந்நாட்டு அரசு.

வெற்றிபெற்ற நாளிலிருந்தே, ஜோ பைடனுக்கு பலரும் வாழ்த்து சொல்லி வருகின்றனர். அவர்களில் மிக முக்கியமானவர், பருவநிலை மாற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசி, உலகின் கவனத்தை ஈர்த்த கிரேட்டா துன்பர்க்.

கிரோட்ட, இளம் வயதிலேயே, சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுத்தவர். அவரின் பெயர் நோபல் பரிசுக்கான பரிந்துரையில் இடம்பெற்றது.

கிரேட்டா, பைடனுக்கு வாழ்த்து தெரிவித்தது மட்டுமன்றி, தனது ட்விட்டர் பதிவுகள் மூலம் முன்னாள் அதிபர் டிரம்பை கேலி செய்து வருகிறார். கிரேட்டாவுக்கும் டிரம்புக்கும் இடையே, முன்பிருந்தே சுற்றுச்சூழல் சீர்கேடு விஷயத்தில் அதீத கருத்து வேறுபாடு நிலவிவந்ததும் இதற்கு முக்கிய காரணம்.

அதிபர் தேர்தல் முடிவுற்றபின், வாக்கு எண்ணிக்கையில் தனக்கு பின்னடைவு ஏற்பட்ட போது, வாக்கு எண்ணிக்கையை நிறுத்தும்படி `STOP THE COUNT’ என டிரம்ப், டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து கிரேட்டா, தனது ட்விட்டரில் ட்ரம்ப்பை இணைப்பு செய்து, “இது அபத்தமான ஒன்று. டிரம்ப் தன் கோபத்தை சரியாக கையாள வேண்டும். அதற்கான வழியாக, நண்பர்களோடு படம் பாருங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த வார்த்தைகள், அதற்கு முன்னர், டிரம்ப் கிரேட்டாவை பார்த்து கூறியவை. சுற்றுச்சூழல் சார்ந்த கிரேட்டாவின் முன்னெடுப்புக்கு கிடைத்த பத்திரிகை நிறுவனமொன்றின் அங்கீகாரத்தினை ஏற்காமல், அதை மறுக்க முயன்றபோது, ட்ரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் கிரேட்டாவை குறிப்பிட்டு இதே வார்த்தைகளை கூறியிருந்தார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறியது குறித்து, கிரேட்டா தனது டிவிட்டர் பக்கத்தில் “எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் மகிழ்ச்சியான முதியவரைப் பார்க்க நன்றாக இருக்கிறது. அவருக்கு பிரகாசமான மற்றும் அற்புதமான எதிர்க்காலம் காத்திருக்கிறது என எண்ணுகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சமீபத்தில் வெள்ளை மாளிகையில் ஏற்பட்ட வன்முறையை தூண்டியதாக, டிரம்ப்பின் டிவிட்டர் கணக்கை அந்த நிறுவனம், முழுவதுமாக முடக்கிவிட்டது. ஆகவே ட்ரம்ப்பால் கிரேட்டாவுக்கு டிவிட்டரில் பதிலளிக்க முடியாது.

”மகிழ்ச்சியான முதியவர்” – ட்ரம்பை கேலி செய்த கிரேட்டா துன்பர்க்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்