Aran Sei

அரசு மௌனமாக இருப்பது விவசாயிகளுக்கு எதிராக திட்டமிடுவதை காட்டுகிறது – பாரதிய கிசான் சங்கம்

டந்த சில நாட்களாக மத்திய அரசு அமைதியாக இருந்து வருவது, வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளது என்பதை குறிக்கிறது என, பாரதிய கிசான் சங்கம் தலைவர் ராகேஷ் திகாய்த் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர மத்திய அரசு முன் வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அப்சல்கரில் செய்தியாளர்களைச் சந்தித்த திகாய்த், ”கடந்த 15, 20 நாட்களாக மத்திய அரசு மௌனமாக இருப்பது, ஏதோ நடக்கப்போகிறது என்பதை குறிக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு எதிராக அரசாங்கம் ஏதோ செய்யத் திட்டமிட்டிருக்கிறது. என்ன நடந்தாலும் சரி, முடிவு கிடைக்காமல் விவசாயிகள் பின்வாங்கமாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

சுவரொட்டி ஒட்டினால், சுவர் விளம்பரம் எழுதினால் ஓராண்டு சிறை – உ.பி., அரசின் புதிய சட்டம்

”விவசாயிகள் தயாராக இருக்கின்றனர். அவர்கள் பயிர்களைக் கவனித்து கொண்டு, போராட்டத்திலும் ஈடுபடுவார்கள். நேரம் வரும்பொழுது அரசாங்கம் பேச்சுவார்த்தையை தொடரும்” என்று திகாய்த் கூறினார்.

மார்ச் 24 ஆம் தேதிவரை பல்வேறு பகுதிகளில் ”மகாபஞ்சாயத்துகள்” நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ள திகாய்த், குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட கலவரம்குறித்த கேள்விக்கு, அது அரசாங்கம் ஏற்படுத்திய சிக்கல் என பதிலளித்தார்.

கணவன் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும் சரி பாலியல் வன்புணர்வு செய்தார் என கூறலாமா ? : உச்ச நீதிமன்றம்

விவசாயிகள் தங்கள் பயிர்களை ஆங்காங்கே அழித்துவருவது தொடர்பாக கருத்து தெரிவித்த திகாய்த், ”இன்னும் அந்தக் கட்டத்தை அடையவில்லை” என பாரதிய கிசான் சங்கம் விவசாயிகளிடம் கூறியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

”இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என விவசாயிகளிடம் அரசாங்கம் ஏன் வேண்டுகோள் விடுக்கவில்லை” எனக் கேள்வி எழுப்பிய திகாய்த், ”உத்திரபிரதேசத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில், கோதுமை பயிர்கள் கொள்முதல் செய்யப்படாவிட்டால், மாவட்ட தலைநகர்களில் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபடுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Source : PTI

அரசு மௌனமாக இருப்பது விவசாயிகளுக்கு எதிராக திட்டமிடுவதை காட்டுகிறது – பாரதிய கிசான் சங்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்