சமூக ஊடகங்களைக் கடுப்படுத்த புதிய சட்டங்களை இயற்றும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என, பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ் தெரிவித்துள்ளதார்.
‘ஏனெனில் இந்தியா முதலில் வருகிறது’ (Because India Comes First) என்ற, தனது புத்தக வெளியீட்டில் பேசிய ராம் மாதவ், அரசு மற்றும் அரசியல் சாரா சக்திகள் மூலம் ஜனநாயகம் புதிய சவால்களைச் சந்தித்து வருகிறது எனக் கூறியுள்ளார்.
சனிக்கிழமை (பிப்ரவரி 20), பிரபா கைத்தான் அறக்கட்டளை நடத்திய அந்த நிகழ்வில், ”சமூக ஊடகங்கள் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சக்தி வாய்ந்தவை. அராஜகத்தை ஊக்குவிக்கும் மற்றும் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும். எனவே சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த அவற்றை அரசியலமைப்பு கட்டமைப்பிற்கு கொண்டு வருவது அவசியம்” என ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா – ஆட்சியை இழக்கிறதா காங்கிரஸ்?
”சமூக ஊடகங்களைச் சமாளிக்க தற்போது இருக்கும் சட்டங்கள் போதுமானதாக இல்லை. அவற்றை நிர்வகிக்கவும், கட்டுப்படுத்தவும் எங்களுக்குப் புதிய சட்டம் தேவை. அரசாங்கம் ஏற்கனவே அந்த திசையில் செயல்பட்டு வருகிறது” என மாதவ் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதங்களில், கணக்குகளை முடக்குவது தொடர்பான விவகாரத்தில், இந்திய சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியிருந்த நிலையில், ராம் மாதவ் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வெறுக்கத் தக்க கருத்துக்களை பதிவிடுவதை ஒழுங்குபடுத்த சட்டம் இயற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு மற்றும் ட்விட்டர் இந்தியாவிற்கு, உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.