ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை தேவைப்படும் இடங்களுக்குக் கொண்டுசெல்ல ‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’ என்கிற பெயரில் ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக மத்திய ரயில்வேதுறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
Roll on Roll off Oxygen trucks getting loaded for Oxygen Express. Under PM @NarendraModi ji's leadership, Govt of India is committed to doing everything possible to help COVID-19 patients. pic.twitter.com/dFgHeKLRxr
— Piyush Goyal (@PiyushGoyal) April 18, 2021
தீவிர பாதிப்புள்ள கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் ஆக்ஸிஜன் தேவை மிக முக்கியமானதாக உள்ளதால், மருத்துவ ஆக்ஸிஜன் லாரிகளை ரயில்மூலம் கொண்டு வர முடியுமா என ரயில்வே துறையிடம் மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகள் கேட்டுக் கொண்டன.
இந்நிலையில், மருத்துவ ஆக்ஸிஜன் கொண்டு செல்வதற்கான தொழில்நுட்ப சாத்தியங்களை ஆராய்ந்த ரயில்வே துறை, டேங்கர் லாரிகளை ரயில்களில் ஏற்றிச் செல்வதாக முடிவு செய்துள்ளது.
மேலும், 3320 மி.மீ உயரமுள்ள டேங்கர் லாரிகளை, 1290 மி.மீ உயரமுள்ள தட்டையான சரக்கு ரயில் பெட்டிகள்மூலம் கொண்டு செல்வது சாத்தியம் என கண்டறியப்பட்டுள்ளதால், டேங்கர் லாரிகளைச் சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள நேபாளம் விரையும் இந்தியர்கள்: இந்தியாவின் பற்றாக்குறை காரணமா?
இதற்கான பரிசோதனைகள் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டன. மும்பையிலிருந்து ஒரு டேங்கர் லாரியை ரயில் வழியாக தில்லி கொண்டுவந்து, குறுக்குச் சாலை பாலங்களை டேங்கர் லாரி உரசுகிறதா என பல இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், கடந்த 16 அன்று இந்த டேங்கர் லாரிகளை வர்த்தக ரீதியில் கொண்டு செல்வதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய சுற்றறிக்கையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மும்பையிலிருந்து காலி டேங்கர் லாரிகளை விசாகப்பட்டினம், ஜம்ஷெட்பூர், ரூர்கேலா, பகோரா ஆகிய இடங்களுக்கு ஏற்றிச் சென்று, ஆக்ஸிஜனை நிரப்பி, டேங்கர் லாரிகளைச் சம்பந்தப்பட்ட ரயில் நிலையங்களில் ஏற்றி, இறக்குவதற்கான வசதிகள் இன்னும் ஓரிரு நாட்களில் தயாராகிவிடும் என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று மும்பையிலிருந்து 10 காலி டேங்கர் லாரிகளைக் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரெம்தேசிவிர் மருந்துகளை அவசரமாகக் கோரிய மகாராஷ்டிரா அரசு – அலட்சியமாகப் பதிலளித்த பிரதமர் அலுவலகம்
மேலும், ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகளை ரயிலில் கொண்டு செல்வதற்கு முழு அளவில் நடவடிக்கை எடுக்குமாறும் மண்டல பொது மேலாளர்களுக்கு ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.
source; Railways getting fully ready to Transport Liquid Medical Oxygen (LMO) and Oxygen Cylinders,18 APR 2021
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.