Aran Sei

’இந்தியாவில் உருமாற்றமான கொரோனா வைரஸ்’ எனும் வார்த்தையை நீக்குங்கள் – சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு கடிதம்

ந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் என்ற தவறான பெயரை நீக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களுக்கு ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

மே 13 ஆம் தேதி உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸில் உருமாற்றம் அடைந்த பி.1.617 எனும் வைரஸ் பரவல் கவலையளிப்பதாக தெரிவித்திருந்தது.

பிரதமரின் கண்ணீரை முதலை கண்ணீருடன் ஒப்பிடாதீர்கள்; முதலைகள் பாவம் – தி டெலிகிராப்

இதில் இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் என்று குறிப்பிடவில்லை. ஆனால் இதுகுறித்து சமூக ஊடகங்களில் இந்தியாவில் உருமாற்றம் அடைந்த வைரஸ் என்று பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் என்ற சொல்லை நீக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து சமூக ஊடகங்களுக்கும் இந்திய ஒன்றிய அரசு எழுதியிருக்கும் கடிதத்தில், “இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் என்ற வார்த்தையை உடனடியாக நீக்க வேண்டும். அந்த வார்த்தை முற்றிலும் தவறானது.” என தெரிவித்துள்ளது.

”உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் பி.1.617 என்று தான் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் என்று தெரிவிக்கவில்லை. இந்நிலையில், அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் மரியாதைக்கு களங்கம் விளைவிக்க முயல்கிறார்கள்” என குறிப்பிட்டுள்ளது.

‘கொரோனா பேரிடரில் அறிவுரைகள் வழங்குவதற்கு பதிலாக செயல்பாட்டில் இறங்குங்கள் மோடி’ – காங்கிரஸ் வலியுறுத்தல்

இதுகுறித்து ஒன்றிய அரசின் மூத்த அதிகாரி, ”இந்தியாவில்  உருமாற்றம் அடைந்த கொரோனா என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என சமூக ஊடகங்களுக்கு ஒன்றிய அரசு தெளிவான மற்றும் கண்டிப்பான உத்தரவின் மூலம் தெரிவித்துள்ளது. இந்த வார்த்தை பல நேரங்களில் தவறாக பயன்படுத்தப்படுகிறது. தேசத்தின் மரியாதையை சர்வதேச அளவில் களங்கப்படுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசின் அறிவிப்புகுறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக ஊடக நிறுவனத்தின் மூத்த அதிகாரி, “ஒன்றிய அரசு கூறியிருப்பதை போல் இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் எனும் வார்த்தையை நீக்குவது சாதாரணமானது அல்ல. லட்சக்கணக்கான பதிவுகளில் குறிப்பிட்ட வார்த்தையை மட்டும் நீக்குவது கடினமான பணி” என கூறியுள்ளார்.

Source : PTI

 

 

 

’இந்தியாவில் உருமாற்றமான கொரோனா வைரஸ்’ எனும் வார்த்தையை நீக்குங்கள் – சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு கடிதம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்