தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு அடுத்து இப்போது ட்விட்டரில் தொடர்ந்து ‘கெட்அவுட்ரவி’ #GetOutRavi என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகின்றது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் #GetOutRavi என்ற ஹேஷ்டேக் முதலிடம் பிடித்துள்ளது
இந்த ஆண்டின் (2023) முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையோடு தொடங்கியது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். ஆர்.என்.ரவி தமிழில் பேசத் தொடங்கினார். தொடர்ந்து தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தமிழில் கூறினார்.
தேசியகீத அவமதிப்பு: ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் – திருமாவளவன் அறிவிப்பு
தொடர்ந்து அவர் தனது உரையை தொடங்கும்போதே காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு எதிராக தங்கள் எதிர்ப்புகளை காட்டினர். மேலும் அவர்கள் “எங்கள் நாடு தமிழ்நாடு” என்றும், “தமிழ்நாடு வாழ்க” என்றும் முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து முழக்கம் எழுப்பியபோதும், ஆளுநர் தனது உரையைப் பேசிக்கொண்டே இருந்தார்.
இருப்பினும் தொடர்ந்து முழக்கத்தை எழுப்பிய அக்கட்சியினர், பின்னர் வெளிநடப்பு செய்ய எண்ணினர். அதன்படி அதிமுகவை தவிர காங்கிரஸ், மதிமுக, விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகளின் சட்டமான உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
இதனை தொடர்ந்து பேசிய ஆளுநர், சட்டசபை முதல் கூட்டத்திற்காக தமிழ்நாடு அரசு தயார் செய்து கொடுத்த உரையில் உள்ள 65-வது பத்தியை ஆளுநர் திட்டமிட்டு வாசிக்க மறுத்துள்ளார். அதில், ‘சமூக நீதி’ முதல் ‘திராவிட மாடல் ஆட்சி’ வரை 10-க்கும் மேற்பட்ட வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர்” – ஆகிய 5 பெயர்களை ஆளுநர் தனது உரையிலிருந்து நீக்கிப் பேசியுள்ளார்.
மேலும் சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லூயிர் ஒப்புதல், திராவிட மாடல் – ஆகிய 8 வார்த்தைகளையும் ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்து வாசித்துள்ளார்.
ஆளுநரின் இந்த நடவடிக்கையை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு பேசினார். அப்போது முதலமைச்சர் பேசிக்கொண்டிருக்கும்போதே அவை மரியாதை இல்லாமல் ஒரு எதிர்க்கட்சிபோல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார்.
இதனால் தற்போது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு தேசிய கீதம் பாடாமலும் வெளியே ஆளுநர் சென்றுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் வலுத்து வருகிறது. ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் இருந்து பல்வேறு கட்சிகள் தரப்பிலிருந்து கண்டனங்கள் கிளம்பியுள்ளது.
இதனை தொடர்ந்து ட்விட்டரில் கெட்அவுட்ரவி #GetOutRavi என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகின்றது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் =#GetOutRavi என்ற ஹேஷ்டேக் முதலிடம் பிடித்துள்ளது.
முன்னதாக தமிழ்நாட்டை ‘தமிழகம்’ என்று சொல்வதே சரியாக இருக்கும்” என்று ஆளுநர் கூறியதற்கு பல்வேறு கண்டங்கள் கிளம்பியது. மேலும் ஆளுநருக்கு எதிராக #தமிழ்நாடு என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது. அதுவே இன்னும் ஓயாத நிலையில், தற்போது மீண்டும் ஆளுநருக்கு எதிராக #GetOutRavi, #தமிழ்நாடு என்று இரண்டு ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் உள்ளது.
Governor RN Ravi walked out from Tamilnadu assembly against CM Stalin speech | BJP | DMK | MK Stalin
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.