Aran Sei

ஆளுநர் ஆர்.என். ரவியை சட்டப்பேரவைக்கு அழைத்து திமுக அரசு அவமானப் படுத்தியுள்ளது – பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் குற்றசாட்டு

ளுநர் ஆர்.என். ரவியை சட்டப்பேரவைக்கு அழைத்து திமுக அரசு அவமானப்படுத்தியுள்ளது என்று வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையிலிருந்து பாதியிலேயே வெளியேறியது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், “இன்றைக்கு சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியினர் நடந்துகொண்ட போக்கு மாநில நலனுக்கு உகந்தது அல்ல. ஆளுநர் உரையை தயாரித்து அதை ஆளுநர் வழங்கி ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். ஆளுநர் அரசு கொடுக்கும் உரையில் இருப்பதை பேசுவார். ஆனால் ஆளுநர் திமுக அரசு நினைப்பதை எல்லாம் பேச வேண்டும் என்று அவசியமில்லை.

மு.க.ஸ்டாலின் பேசி கொண்டிருக்கும் போதே சட்டப்பேரவையிலிருந்து வெளியேறிய ஆளுநர்: தேசிய கீதம் இசைக்கும் முன்பே ஆளுநர் வெளியேறியதற்கு சபாநாயகர் அப்பாவு கண்டனம்

திமுக அரசு சித்தாந்தத்தை ஆளுநர் போற்றிப் புகழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். திமுக அரசு சித்தாந்தத்தை ஆளுநர் மீது திணித்துள்ளீர்கள். அரசு சொல்வதை மட்டுமே பேச வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஆளுநருக்கு இல்லை. நீங்கள் உங்களது அதிகாரத்தை ஆளுநர் மீது திணிக்க முயல்கிறீர்கள். ஓரு ஆளுநரை அவமதித்துள்ளீர்கள். ஆளுநரை அசிங்கப்படுத்துகிறீர்கள். ஆளுநரை அவமதிக்கும் கட்சிகள் ஜனநாயகத்திற்கு விரோதமான கட்சிகள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Governor RN Ravi walked out from Tamilnadu assembly against CM Stalin speech | BJP | DMK | MK Stalin

ஆளுநர் ஆர்.என். ரவியை சட்டப்பேரவைக்கு அழைத்து திமுக அரசு அவமானப் படுத்தியுள்ளது – பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் குற்றசாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்