Aran Sei

புதியக் கல்விக் கொள்கை தொடர்பான தமிழ்நாடு ஆளுநரின் கருத்து – பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு கண்டனம்

மிழ்நாடு திறந்தவழிப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி பேசிய கருத்திற்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமைப்பின் பொதுச் செயலாளரும் கல்வியாளருமான பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கடமைகளை நிறைவேற்ற மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாரா அல்லது புதிய கல்விக் கொள்கை 2020 தொடர்பாக பரப்புரை செய்வதற்கான  தூதராக நியமிக்கப்பட்டுள்ளரா என்பதை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெளிவுபடுத்த வேண்டும்.

‘மாநில உரிமைகளில் தலையிடும் புதிய கல்வி கொள்கை நுழையாமலிருக்க துறைசார் நடவடிக்கை’ – உயர்கல்வித்துறை அமைச்சர் உறுதி

”சரியான காரணமின்றி ஒரு மசோதவை நிறுத்தி வைப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தை அவமதிப்பது. அரசியலமைப்பு அதிகாரத்தில் இருந்து கொண்டு கொள்கை போதனைகள் வழங்குவதை ஏற்க முடியாது. இன்னும் ஒருபடி மேலே சென்று தான் தொடர்பு கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் கொள்கையைப் படிக்கவில்லை என்று அப்பட்டமாக கூறுகிறார். அவர் யாரை குறிப்பிடுகிறார் அமைச்சர்களா? அல்லது அரசு அதிகாரிகளா?.

புதியக் கல்விக் கொள்கையை ஏன் நிராகரிக்க வேண்டும் என்பதற்கான எழுத்துப்பூர்வ விளக்கங்கள் அரசாங்கத்திடம் உள்ளன. அவற்றை பெறவும், தானே படிக்கவும் ஆளுநர் முயற்சித்தாரா?”

புதிய கல்விக் கொள்கையை அமல் படுத்துங்கள் – கல்லூரி முதல்வர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் அறிவுறுத்தல்

தமிழ்நாடு அரசின் மசோதா தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மார்ச் 29, 2022 தேதியிட்ட எனது கேள்விக்கு ஆளுநர் மாளிகை இன்னும் பதிலளிக்கவில்லை. இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மீறல் மட்டுமல்ல, ஆளுநர் மாளிகை சட்டங்களை மதிப்பதில்ல என்பதற்கான நிரூபணமும் ஆகும்.

சட்டரீதியாக கேட்கப்பட்ட நியாயமான கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுக்கும் ஆளுநர், மற்ற அரசியலமைப்பு அதிகாரிகள்மீது ஆதாரமற்ற குற்றசாட்டுகளை கூறுகிறார். மேலும், நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிக்காமல், இந்திய அரசியலமைப்பின் அடிப்படை விழுமியங்களில் ஒன்றான கூட்டாட்சி அமைப்பைச் சிதைக்க முயற்சிக்கிறார்.

‘ஏன் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டும்’ – இந்தி பேசாத மாநிலங்களின் முதல்வர்களுக்கு வைகோ கடிதம்

தேர்தல் அறிக்கை என்பது தேர்தல் வாக்குறுதி. மக்களால் வழங்கப்பட்ட அரசியல் ஆணையைத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மதிக்க வேண்டும். அன்றைய தினம் கவர்னர் பதவியில் இருப்பவர் நல்லதாக கருதும் கொள்கைகளையும் திட்டங்களையும் திணிக்கவும், மக்களின் ஆணையை ரத்து செய்யவும், கவர்னர் அலுவலகத்தைப் பயன்படுத்தக் கூடாது.

இந்திய அரசியலமைப்பை நிலைநிறுத்தவும், அரசியலமைப்பு அதிகாரம் என்ற முறையில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றவும், ஜனநாயகத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் பலவீனப்படுத்துவதைத் தவிர்க்கவும் என்று மாண்புமிகு ஆளுநரை,  கேட்டுக்கொள்கிறோம்.” என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாக்க அடக்கி பேசுங்க Annamalai Journalist Protest Against Annamalai | Journalist Mani | Haseef

 

புதியக் கல்விக் கொள்கை தொடர்பான தமிழ்நாடு ஆளுநரின் கருத்து – பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்