கொரோனா பெருந்தொற்று காலத்தில் கங்கையாற்றில் வீசப்பட்ட கொரோனா நோயாளிகளின் சடலங்களின் எண்ணிக்கை குறித்த தரவுகள் எங்களிடம் இல்லை என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
நேற்று(பிப்பிரவரி 7), இது தொடர்பாக, மாநிலங்களவையில் எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு பதிலிளித்துள்ள ஒன்றிய நீர்சக்தித்துறை இணை அமைச்சர் பிஷ்வேஸ்வர் துடு, “கங்கை நதியில் மிதந்த சடலங்கள் குறித்தும், கங்கையின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இவ்வுடல்கள் முறையாக கையாளப்பட்டு, அகற்றப்பட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தம் அறிக்கை சமர்பிக்க மாநில அரசுகளிடம் தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கம் (என்எம்சிஜி) கோரியது” என்று கூறியுள்ளார்.
“கங்கை நதியில் கொட்டப்பட்ட கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களுடைய எண்ணிக்கை குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை” என்று அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும், நமாமி கங்கை திட்டத்தின் கீழ், ஊடகங்கள் மற்றும் விளம்பரம் உள்ளிட்டவற்றுக்கு, தகவல் தொடர்பு மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் கீழ் ரூ.126 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் பிஷ்வேஸ்வர் துடு குறிப்பிட்டுள்ளார்.
முன்னர், தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கத்தின் (என்எம்சிஜி) முன்னாள் இயக்குநர் ஜெனரல் ராஜீவ் ரஞ்சன் மிஸ்ரா, “மாவட்ட நீதிபதிகள் மற்றும் பஞ்சாயத்து குழுக்களின் அறிக்கைகளின்படி, கொரோனா இரண்டாவது அலையின் போது கங்கையில் வீசப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 300க்கு மேல் இல்லை” என்று கூறியிருந்தார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.