Aran Sei

‘கடந்த 3 ஆண்டுகளில் வேலையின்மையால் 9,140 பேர் தற்கொலை’ – ஒன்றிய அரசு தகவல்

2018ஆம் ஆண்டிற்கும் 2020ஆம் ஆண்டிற்கும் இடையில் 16,000-க்கும் மேற்பட்டோர் கடன் சுமை உள்ளிட்ட கடன் தொல்லைகளின் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இன்று (பிப்பிரவரி 9), மாநிலங்களவையில் பேசியுள்ள ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், “2018ஆம் ஆண்டிற்கும் 2020ஆம் ஆண்டிற்கும் இடையில், 9,140 பேர் வேலையின்மை காரணமாக தற்கொலைச் செய்து கொண்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வேலையின்மை விகிதம் 14.7 விழுக்காடாக அதிகரிப்பு – பொருளாதார ஆய்வில் தகவல்

“2020 இல் 5,213 பேரும், 2019 இல் 5,908 பேரும், 2018 இல் 4,970 பேரும் கடன் சுமை உள்ளிட்ட கடன் தொல்லைகளின் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2020 இல் 3,548 பேரும், 2019 இல் 2,851 பேரும், 2018 இல் 2,741 பேரும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்” என்று எழுத்துப்பூர்வ ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளித்துள்ளார்.

Source: PTI

‘கடந்த 3 ஆண்டுகளில் வேலையின்மையால் 9,140 பேர் தற்கொலை’ – ஒன்றிய அரசு தகவல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்