Aran Sei

உ.பி.யில் தொழுவத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பசு – விலங்குகளைக் கொடுமை படுத்தியதாக மேலாளர் மீது வழக்கு

த்தரபிரதேச மாநிலத்தில் நோய்வாய்ப்பட்ட இரண்டு மாடுகளை அரசு மாட்டுத் தொழுவத்தில் இருந்து வெளியேற்றியதற்காக தொழுவ மேலாளர் உள்ளிட்ட மூவர் மீது விலங்குகளை கொடுமை செய்தல் உள்ளிட்ட குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் படோஹி மாவட்டத்தில் உள்ள ஹமிர்பூர் கிராம மாட்டுத் தொழுவத்திற்கு வெளியே மாடுகள் அலைவதாகவும், நாய்கள் அவற்றை தாக்கி கொன்றுவிட்டதாகவும் கிராம மக்கள் புகார் அளித்ததை அடுத்து, மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவுரை காவல் நிலைய அதிகாரி அஜய் சேத் தெரிவித்துள்ளார்.

ஹமிர்பூர் கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில், மாட்டுத் தொழுவ மேலாளர் லால் பகதூர் கவுதம், மாட்டுத் தொழுவத்தின் பாதுகாவலர்கள் ரமேஷ்குமார், ராஜேந்திர பிரசாத் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாடுகள் நம்முடைய தாய் என கூறிய பிரதமர்: சாவர்கரின் புத்தகத்தை மேற்கோள்காட்டி திக்விஜய சிங் பதிலடி

நாட்டிலேயே முதன்முறையாக உத்தர பிரதேசத்தில் மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படவுள்ளது என்று அம்மாநில கால்நடை, மீன்வளத் துறை, பால்வளத் துறை அமைச்சர் லக்‌சுமி நாராயண் அண்மையில் அறிவித்திருந்தார்.

நவம்பர் 14ஆம் தேதி, செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள லக்‌சுமி நாராயண், “நோய்களால் பாதிக்கப்பட்ட மாடுகளின் உயிரைக் காப்பாற்ற உத்தரப் பிரதேசத்தில் மாடுகளுக்கான பிரத்யேக ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படவிருக்கிறது. இதற்காக 515 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. ஒரு புதுமையான திட்டம் இது, நாட்டிலேயே உத்தரப் பிரதேசத்தில்தான் முதன்முறையாக தொடங்கப்படுகிறது” என்று கூறியிருந்தார்.

“இந்த சேவையானது எண் 112 அவசரகால சேவையைப் போல் மாடுகளுக்கு பயன் தரும். ஒவ்வொரு ஆம்புலன்ஸிலும் ஒரு கால்நடை மருத்துவர், இரண்டு உதவியாளர்கள் இருப்பார்கள். அழைப்பு வந்த அடுத்த 15 முதல் 20 நிமிடங்களில் அவர்கள் தேவைப்படும் இடத்தில் இருப்பார்கள். இதற்காக லக்னோவில் ஒரு கால் சென்ட்டர் தொடங்கப்படுகிறது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

Source: PTI

உ.பி.யில் தொழுவத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பசு – விலங்குகளைக் கொடுமை படுத்தியதாக மேலாளர் மீது வழக்கு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்