Aran Sei

அரசின் சொத்துக்களை விற்பது அல்லது தனியார்மயமாக்குவதுதான் சிறந்த கொள்கை – நரேந்திர மோடி

Image Credit : thewire.in

பொதுத்துறை நிறுவனங்கள் வரி செலுத்துவோருக்கு கூடுதல் சுமையைத் தருகிறது என்றும், அரசாங்கத்திற்கு வணிகத்தில் ஈடுபட எந்த அவசியமும் இல்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறையின் தனியார்மயமாக்கல் குறித்த ஒரு இணையவழி கருத்தரங்கில் உரையாற்றிய மோடி, “ஒரு அரசாங்கம் வியாபாரத்தில் ஈடுபடும்போது, ​​அது இழப்புகளுக்கு வழிவகுக்கிறது. அரசாங்கம் விதிகள் மற்றும் உறுதியான வணிக முடிவுகளை எடுக்க தைரியம் இல்லாதது” என குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் பாஜக தோல்வியடைந்தால் தேசத்திலிருந்தே தூக்கிய எறியப்படும் – மம்தா பானர்ஜி

மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் ”விற்பது அல்லது நவீனமயமாக்குவது” மந்திரத்தை நோக்கித், தனது அரசு செயல்பட்டு வருகிறது என மோடி கூறியுள்ளார்.

“நிறுவனங்கள் மற்றும் வணிகங்களை ஆதரிப்பது அரசாங்கத்தின் கடமையாகும், ஆனால் அதற்கு நிறுவனங்களைச் சொந்தமாக வைத்து நடத்த வேண்டும் என்பது அவசியமில்லை.” என்று கூறியுள்ள மோடி, இந்தியாவை உயர் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கான வரைபடத்தை, இந்த ஆண்டு பட்ஜெட் வழங்கியிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மோடியின் பெயரில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் – குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்

”அரசின் சொத்துக்களை விற்பது அல்லது தனியார்மயமாக்குதல் மக்களை மேம்படுத்த உதவும் என்றும், இது போன்று அரசிடம் உள்ள 100க்கும் மேற்பட்ட ‘பயன்படுத்தப்படாத அல்லது குறைவாக பயன்படுத்தப்படும்’ சொத்துக்களின் மூலம், 2.5 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டி, அது வளர்ச்சி திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்” என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

“நலிந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதி ஆதரவு, பொருளாதாரத்தின் மீது ஒரு சுமையை ஏற்படுத்துகிறது. மேலும் பொதுத்துறை நிறுவனங்களை வெறும் மரபிற்காக மட்டும் இயக்கக் கூடாது” என்று மோடி தெரிவித்துள்ளார்.

”தேச முன்னேற்றத்திலும், உலகளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்துவதிலும் தனியார் துறையின் பங்கு குறித்து, இந்தியா பெருமை கொள்கிறது” எனவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அரசின் சொத்துக்களை விற்பது அல்லது தனியார்மயமாக்குவதுதான் சிறந்த கொள்கை – நரேந்திர மோடி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்