நேபாளி மொழி இந்திய மொழியல்ல எனக்கூறி அகில இந்திய பெண்கள் மாநாடு அமைப்பு “ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ்’ நிகழ்ச்சியை நிராகரித்ததற்கு கூர்க்கா அமைப்புகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளன.
உத்தேச ஆசாதி கொண்டாங்களுக்கான பங்களிப்பை வழங்கக் கோரி பிராந்திய பிரிவுகளுக்கு ஜூன் 9 ஆம் தேதி அகில இந்திய பெண்கள் மாநாடு அமைப்பின் செயற்குழு உறுப்பினர் சந்திர பிரபா பாண்டே குறிப்பை அனுப்பியிருந்தார். அதில் தேசபக்தி பாடல்கள் மற்றும் பிராந்திர மொழி பாடல்களுக்கு நடனமாடுவது அவசியம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் கலிம்போங் மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள், அவர்களது பங்களிப்பை நேபாளி மொழியில் அனுப்பியிருந்தனர். இதற்கு இந்திய மொழி அல்லாத ஒரு மொழியில் நிகழ்ச்சிகளை காட்ட முடியாது என்று சந்திர பிரபா பாண்டே கூறியுள்ளார்.
மேலும், கூர்க்கா மக்கள் இந்தியாவிற்கு புலம்பெயர்ந்தவர்கள் என்றும், அவர்கள் இந்தியர்களுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் என்றும் சந்திர பிரபா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கலிம்போங் மாவட்ட செயலாளர் அருணா பிரதான், நேபாளி மொழி இந்தியாவில் இருந்து வந்த மொழி அல்ல என்ற வாதத்தை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.
“நேபாளி மொழி இந்திய மொழி அல்ல எனக் கூறி, ஆசாதி கா அம்ருத் மஹொத்சவ்’ நிகழ்ச்சியில் நேபாளி மொழி நிகழ்ச்சிகளை அனுமதிக்காமல் இருப்பதன் மூலம், இந்தியாவில் உள்ள கூர்க்கா சமூக மக்களுக்கு எதிராக வேண்டுமென்றே இனவெறியை அகில இந்திய பெண்கள் மாநாடு அமைப்பு காட்டுகிறது” என்று டார்ஜிலிங் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜூ பிஸ்டா தெரிவித்துள்ளார்.
ஒருவேளை அகில இந்திய பெண்கள் மாநாடு அமைப்பு உறுப்பினர்கள், இந்தியாவின் சுதந்திரத்தை உறுதி செய்வதில் நமது கூர்க்கா சமூக முன்னோர்கள் முக்கியப் பங்காற்றியுள்ளனர் என்பதை அறியாமல் இருக்கலாம்,” என்று அவர் கூறியுள்ளார்.
“இந்தியாவில் 1.05 கோடி மக்களால் நேபாளி மொழி பேசப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையின் கீழ் நேபாளி மொழி இந்திய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை அறியாதவர்கள் சில இந்திய பெண்கள் மாநாடு அமைப்பு போன்ற மதிப்பிற்குரிய அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.” என்று பாரதிய கூர்க்கா யுவ பரிசங்கத்தின் பொதுச் செயலாளர் ரமேஷ் பஸ்தோலா தெரிவித்துள்ளார்.
ஜூன் 15 ஆம் தேதி பாரதிய கூர்க்கா யுவ பரிசங்கின் முக்கிய குழு அவசர கூட்டத்தில், அடுத்த 24 மணி நேரத்தில், சந்திர பிரபா பாண்டே பொதுவெளியில் மன்னிப்பு கோராவிட்டால், சட்ட ரீதியான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Source: The Hindu
பாஜகவின் கலவரபுத்தி எப்பவுமே மாறாது Dr Sharmila Interview | Nupur Sharma on Prophet Muhammad | Yogi
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.