இன்று (ஜனவரி 9) கல்வியாளரும் சமூக சீர்திருத்தவாதியுமான பாத்திமா ஷேக்கின் 191 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கூகுள் தனது முகப்புப் பக்கத்தில் டூடுல் வெளியிட்டுக் கௌரவித்துள்ளது.
“இந்தியாவின் முதல் இஸ்லாமிய பெண் ஆசிரியர்” என்று கருதப்படும் பாத்திமா ஷேக், 1848-ல் ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் ஆகியோருடன் இணைந்து இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளி ஒன்றை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தவர் பாத்திமா ஷேக்” என்று கூகுள் தெரிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு கல்வி கற்பிக்க விரும்பியதால், சாவித்ரிபாய் மற்றும் ஜோதிராவ் புலே ஆகியோர் அவர்களின் தந்குமிடத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர். இதுபோன்ற கடினமான காலங்களில், பாத்திமா ஷேக்கும் அவரது சகோதரருமான உஸ்மான் ஷேக்கும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து, பாத்திமா ஷேக்கின் வீடு இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளியாக மாறியது.
“இங்கு சாவித்ரிபாய் ஃபுலே மற்றும் பாத்திமா ஷேக் ஆகியோர் சாதி, மதம் அல்லது பாலினத்தின் அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்ட தலித் மற்றும் இஸ்லாமிய பெண் குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்தார்கள்” என்று கூகுள் கூறியுள்ளது.
தனது சமூகத்தில் உள்ள தலித் மக்களைப் படிக்க வைக்க ஒவ்வொரு வீடாகச் சென்று குழந்தைகளைப் படிக்க அழைத்தார் என்றும் ஆதிக்க சாதியினரின் பெரும் எதிர்ப்பையும் அவமானத்தையும் தாண்டி பாத்திமா ஷேக்கை விடாப்பிடியாக இருந்து இதனைச் செய்தார் என்றும் கூகுள் விவரித்துள்ளது.
பாத்திமா ஷேக்கின் கதை “வரலாற்றில் இருந்து மறக்கடிக்கப்பட்டது” என்று கூகுள் கூறியுள்ளது. இந்திய அரசாங்கம் 2014-ல் பாத்திமா ஷேக்கின் சாதனைகளை உருது பாடப்புத்தகங்களில் மற்ற கல்வியாளர்களுடன் சேர்த்தது.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.