திமுக ஆட்சிக்கும் சட்டமன்றத்திற்கும் கடவுளின் அருள் கிடைத்திருக்கிறது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது சட்ட மன்ற உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன் கேட்ட கேள்விக்கு விடையளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 16வது சட்டப்பேரவை கூட்டத்தில் நூறாவது கேள்வியும் இந்து சமய அறநிலையத் துறைக்கு வந்தது. முதல் குறுங்கேள்வியும் இந்து சமய அறநிலைத்துறையிடம்தான் கேட்கப்பட்டது. இதன் வழி தெரிய வருவது என்னவென்றால் இந்த ஆட்சிக்கும் சட்டப்பேரவைக்கும் இறைவன் அருள் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இன்று 110-வது விதியின் கீழ் சட்டசபையில் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் இதில் அறிவிப்பு வெளியிட்டார்.
முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பாராட்டி இருந்தனர். இது குறித்துப் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக தேசிய அளவில் பாஜகவிற்கு திமுக ஆதரவு அளித்தது.
காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக தேசிய அளவில் எந்த கட்சியும் முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய முடியாது என்ற கருத்து இருந்தது. ஆனால் 5 ஆண்டுகள் காலம் வாஜ்பாய்க்கு உறுதுணையாக இருந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. கமலாலய தலைவர்களோடு நெருக்கமாக இருந்து ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தவர் கலைஞர். பாஜக ஆட்சி அன்று நடக்க அவர் காரணமாக இருந்தார் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குறிப்பிட்டார்.
Thirumavalavan ஐ சீண்டுறது நல்லதில்ல Annamalai | Ramasubramanian
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.