திரைப்பட நடிகை ஓவியா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 124 (ஏ) (தேசதுரோகம்), 153 (இரு சமூகங்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்துவது), 294 (அவதூறு) 69 (எ) தகவல் தொழிற்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக பாஜகவின் வழக்கறிஞர் பிரிவு கோரிக்கை வைத்துள்ளது.
ஓவியர் ட்ராட்ஸ்கி மருது பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு கோபேக் மோடி என்று கருத்துப்படம் வெளியிட்டிருந்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமர், ஆளூர் ஷாநவாஸ், விக்ரமன், திமுக வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா, எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா உள்ளிட்ட பலர் கோபேக் மோடி எனும் ஹேஷ்டேக்கை பயன்படுத்தி மோடியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். அவர்களின் பதிவுகளைப் பலர் மறுபகிர்வு(reshare) செய்திருந்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு வருகை புரியும் போது ’கோபேக் மோடி’ எனும் ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாவது வாடிக்கையாகும்.
பிரதமர் வருகையையொட்டி ‘ட்ரெண்ட்’ ஆகும் #GobackModi – ட்ரெண்டில் பங்கேற்ற நடிகை ஓவியா
கோபேக் மோடி ஹேஷ்டேக்கை தமிழக மக்கள் பயன்படுத்தவில்லை என்றும் வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலத்திலிருந்தும் ட்விட் செய்வதாக பாஜக ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நாட்டின் வளர்ச்சிக்காக “ஒரே நாடு ஒரே தேர்தல்” – பிரதமர் நரேந்திர மோடி
இதனிடையே, சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு ஒரு நாள் முன்பே ட்விட்டரில் கோபேக் மோடி எனும் ஹேஷ்டேக் பகிரப்பட்டு வந்த நிலையில், நடிகை ஓவியா தன் டிவிட்டர் பக்கத்தில், #GobackModi எனும் ஹாஷ்டேக்கை பயன்படுத்தி, பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
— Oviyaa (@OviyaaSweetz) February 13, 2021
ஓவியாவின் ட்விட்டர் பக்கத்தை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோட் பின்தொடர்கின்றனர். அவரது ‘கோ பேக் மோடி’ பதிவை 19.9 ஆயிரம் பேர் ரீ ட்வீட் செய்துள்ளனர். 58.7 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.
நரேந்திர மோடி அரசு அரசியல்சாசன தினத்தை கொண்டாடுவது நகை முரண் – எஸ்.என்.சாஹூ
இந்நிலையில், தமிழக பாஜகவின் வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் அலெக்சிஸ் சுதாகர், பிரதமருடையே பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதத்திலும், சமூகத்தில் பதற்றம் ஏற்படுத்தும் விதத்திலும், ட்விட்டரில் ‘கோ பேக் மோடி’ எனப் பதிவிட்ட நடிகை ஓவியாவுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தின் மத்திய குற்றப்பிரிவு சைபர் செல்லுக்குப் புகாரளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக போலி செய்தி – ஏஎன்ஐ நிறுவனம் மீது குற்றச்சாட்டு
நடிகை ஓவியா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 124 (ஏ) (தேசதுரோகம்), 153 (இரு சமூகங்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்துவது), 294 (அவதூறு) 69 (எ) தகவல் தொழிற்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பிரதமரை நம்பாத விவசாயிகள் – நரேந்திர மோடியின் வாய்வீச்சு வீரியம் இழக்கிறதா?
பிரதமரின் வருகைக்கு எதிராக கடந்த காலங்களில் தமிழகத்தில் மட்டும் கோபேக் மோடி எனும் ஹேஷ்டேக் ட்ரெண்டான நிலையில், தற்போது மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பிரபலமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.