Aran Sei

2021 இல் இடி, மின்னல் தாக்கி 780 பேர் உயிரிழப்பு – புவி வெப்பமாதலே காரணமென ஆய்வாளர்கள் கருத்து

நாட்டிலேயே கடந்த ஆண்டு இடி, மின்னல்களால் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள மாநிலமாக ஒடிசா உள்ளது.

இந்திய வானிலை ஆய்வகம் வெளியிட்டுள்ள ‘2021 ஆண்டிற்கான இந்திய காலநிலை அறிக்கை’யில், இடி மற்றும் மின்னல்களால், நாடு முழுவதும் 780 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அதிகபட்சமாக ஒடிசா மாநிலத்தில் 213 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

156 இறப்புகளுடன் மத்திய பிரதேசம் இரண்டாவது இடத்திலும், அதைத் தொடர்ந்து பீகார் (89), மகாராஷ்டிரா (76), மேற்கு வங்கம் (58), ஜார்கண்ட் (54), உத்தரபிரதேசம் (49) மற்றும் ராஜஸ்தான் (48) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இது குறித்து, வானிலை விஞ்ஞானிகள் கூறுகையில், “ஒடிசாவில் இரண்டு ரேடார்கள் மட்டுமே உள்ளன. இவை போதாது. குறிப்பிட்ட பகுதிக்கு வரக்கூடிய மின்னல் மற்றும் இடியை கணித்து, முன்கூட்டியே எச்சரிக்கையை வெளியிட, ஒடிசாவில் கூடுதலாக ரேடார்கள் கருவிகளை நிறுவ வேண்டிய அவசியம் உள்ளது” என்று கூறியுள்ளனர்.

மின்னல் தாக்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது- பூவுலகின் நண்பர்கள்

புயல், வெள்ளக் காலத்தில் அரசுகளால் எடுக்கப்படும் மீட்பு நடவடிக்கைகள் அளவுக்கு, மின்னல் இறப்புகளைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்றும் வானிலை நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக, வானிலை நிபுணர் ஒருவர் கூறுகையில், “புவி வெப்பமயமாவதால், சராசரி வெப்பநிலை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது. அதன் காரணமாக, சுற்றுச்சூழல் மாசும் அதிகரித்துள்ளது. இந்நிகழ்வுகளால், மின்னல்களின் தீவிரம் அதிகரித்துள்ளன” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Source: New Indian Express

2021 இல் இடி, மின்னல் தாக்கி 780 பேர் உயிரிழப்பு – புவி வெப்பமாதலே காரணமென ஆய்வாளர்கள் கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்