Aran Sei

உலகளவிலான பொருளாதார நெருக்கடி: மைக்ரோசாஃப்ட், அமேசான், மெட்டா நிறுவனங்களை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் தனது 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது

Image Credits: New Indian Express

கூகுள் தாய் நிறுவனமான ஆல்பபெட் 12,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

உலகளவிலான பொருளாதார நெருக்கடி காரணமாக பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வரும் நிறுவனங்களின் பட்டியலில், கூகுள் நிறுவனமும் தற்போது இணைந்துள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக 2022ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் 1 லட்சத்து 94 ஆயிரம் பேர் வரை வேலையை இழந்துள்ளனர்.

18,000 பேரை பணிநீக்கம் செய்யும் அமேசான் நிறுவனம்: இந்நிறுவனத்தின் வரலாற்றில் இது மிகப்பெரிய பணிநீக்கம் ஆகும்

இந்தநிலையில், நேற்று (ஜனவரி 20) காலை கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, அதன் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த குறிப்பிட்ட மின்னஞ்சல் 12 ஆயிரம் கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த மின்னஞ்சலில் கூகுள் நிறுவனம், 12 ஆயிரம் பேர் வரை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்து இருப்பதாக, சுந்தர் பிச்சை குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் பிளாக் பக்கத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுந்தர் பிச்சை அனுப்பிய மின்னஞ்சலில், “நான் பகிர்ந்து கொள்ள சில கடினமான செய்திகள் உள்ளன. எங்கள் பணியாளர்களை குறைக்க முடிவு செய்துள்ளோம். இதனால் வேலையை இழக்கும் அமெரிக்க ஊழியர்களுக்கு ஏற்கனவே தனி மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம். மற்ற நாடுகளில் வேலை செய்யும் நபர்களுக்கு, உள்ளூர் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் காரணமாக இந்த செயல்முறை நீண்ட நேரம் எடுக்கும்.

இந்தியா: 2022 ஆண்டில் 10,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்

இதன் மூலம் திறமைமிக்க சில நபர்களுக்கு நாங்கள் குட்பை சொல்கிறோம். மேலும் இப்போது எடுக்கப்பட்டு இருக்கும் முடிவுக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன்,” என அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டு இருந்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் கூகுள் வியத்தகு வளர்ச்சியைக் கண்டுள்ளது. அந்த வளர்ச்சிக்கு தொடர்ந்து எரிபொருள் நிரப்பும் வகையில், இன்றைய பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, என சுந்தர் பிச்சை அந்த மின்னஞ்சலில் கூறியுள்ளார்.

Source : NDTV

விமான கதவில் விளையாட்டா? | வசமாக சிக்கியஆட்டுக்குட்டி | Aransei Roast | Annamalaibjp | tejasvi surya

உலகளவிலான பொருளாதார நெருக்கடி: மைக்ரோசாஃப்ட், அமேசான், மெட்டா நிறுவனங்களை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் தனது 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்