Aran Sei

கொரோனா ஊரடங்கினால் பொருளாதார பின்னைடைவு ஏற்பட்டாலும், காலநிலைமாற்றம் குறையவில்லை – உலக வானிலை ஆய்வு மையம்

கொரோனா தொற்றின் காரணமாகக் கடந்த ஆண்டு போடப்பட்ட ஊரடங்கு எந்த அளவிலும் புவி வெப்பமயமாதலையும், பருவநிலை மாற்றத்தையும் மட்டுப்படுத்தவில்லை என்று உலக காலநிலைமாற்ற அறிக்கை-2020-ல் குறிப்பிடப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஊரடங்கின் காரணமாகப் பொருளாதார பின்னடைவுகள் ஏற்பட்டிருந்த நிலையிலும் அது புவி வெப்பமயமாதலையும், காலநிலை மாற்றத்தையும் குறைக்கவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு : காலநிலைமாற்றமே காரணம் – விஞ்ஞானிகள் தகவல்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் வரும் ஏப்ரல் 22, 23 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள காலநிலை பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டுக்கு முன்னதாக , உலக வானிலை ஆய்வு மையம் கடந்த ஏப்ரல் 10 அன்று இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில், கார்பன் உமிழ்வைக் குறைப்பது, காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான பொருளாதார வழிகள் மற்றும் வேலைவாய்ப்புகள், முற்றிலும் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான நடைமுறைகள், புவி வெப்பமயமாதலை 1.5 செல்சியஸ் ஆகக் கட்டுப்படுத்துவது ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணையும் அமெரிக்கா- சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வாழ்த்து கூறி வரவேற்ப்பு

இது குறித்து “கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுகள் காலநிலை மாற்றத்தைச் சற்றும் தடுக்கவில்லை” என்று உலகவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை வெளியிட்ட ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் , “வீணடிப்பதற்கு நம்மிடம் நேரமில்லை என்பதை இந்த அறிக்கை காட்டுகிறது. காலநிலை மாற்றம் வேகமாகிக் கொண்டே இருக்கிறது, இதன் தாக்கங்கள் ஏற்கனவே மக்களுக்கும், உலகத்திற்கும் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. இது செயல்படுவதற்கான ஆண்டு. ” என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் மனித உரிமை மோசமடைந்துள்ளது கவலையளிக்கிறது – ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை

கடந்த 2020-ம் ஆண்டு கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் பிற வாயுக்களின் அளவு குறைந்தது. ஆனால் ஒட்டுமொத்த அளவை பார்க்கும் போத கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன் ,நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகியவற்றின் அளவு தொடர்ந்து உயர்ந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

இதே போன்று எல்நினா விளைவின் காரணமாக மத்திய பசிபிக் கடலில் அதிகளவில் குளிர் உணரப்பட்டதாகவும், உலக அளவில் கடல் மட்ட உயர்வு குறைந்திருந்தாலும் பல இடங்களில் இது ஏற்றத்தாழ்வாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கினால்  பொருளாதார பின்னைடைவு ஏற்பட்டாலும்,  காலநிலைமாற்றம் குறையவில்லை  –  உலக வானிலை ஆய்வு மையம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்