2023-ம் ஆண்டுக்கான முதல் தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நேற்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது, தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையில் உள்ள பல வரிகளை ஆளுநர் வாசிக்கவில்லை.
மேலும், முதலமைச்சர் உரை வாசித்தபோது ஆளுநர் பாதியிலேயே வெளியேறி சென்றார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநரின் இத்தகைய செயலுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும்
இந்நிலையில் ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் செம்மொழி பூங்கா, அண்ணா அறிவாலயம் ஆகிய இடங்களில் #GetOutRavi என்ற வாசகத்துடன் திமுக சார்பில் பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆளுநருக்கு ஆதரவாக ‘ஆளுநரின் ஆளுமையே’ என பாஜகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
Whatsapp rumour on Governor RN Ravi Stand on Tamilnadu Government I MK Stalin I Annamalai I BJP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.