Aran Sei

கொரோனாவை எதிர்கொள்ள ஒரே பூமி, ஒரே சுகாதார அணுகுமுறை என்ற கொள்கை தேவை – ஜி 7 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி உரை

கொரொனாவை எதிர்கொள்ள ஒரே பூமி, ஒரே சுகாதார அணுகுமுறை என்ற கொள்கை அவசியம் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

ஜி7 கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுள்ள மோடி இவ்வாறு பேசியுள்ளார்.

பிரிட்டனின் கார்ன்வால் பகுதியில் செயின்ட் ஐவ்ஸ் நகரில் மூன்று நாட்களாக நடைபெற்று வரும் இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், பிரான்ஸ் அதிபர் மேக்ரோன், இத்தாலி பிரதமர் மரியோ தராகி மற்றும் ஜப்பான் நாட்டின் பிரதமர் யோஷிஹைட் சுகா கலந்து கொண்டுள்ளனர்.

மாநாட்டின் இறுதி நாளான இன்று சிறப்பு அழைப்பாளாரக பங்கேற்றுள்ள இந்தியப் பிரதமர் மோடி, “கொரோனா பெருந்தொற்றை இந்தியா ஒட்டுமொத்த சமூகமாக இணைந்து எதிர்கொண்டது. தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியவும், தடுப்பூசிகளை நிர்வகிக்கும் பணியிலும் டிஜிட்டல் உபகரணங்களை இந்தியா வெற்றிகரமாக பயன்படுத்தியுள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.

“உலக அளவில் சுகாதார நிர்வாகத்தை மேம்படுத்தும் கூட்டு  முயற்சிக்கு இந்தியா ஆதரவளிக்கும். அதற்கு ஒரே பூமி, ஒரே சுகாதார அணுகுமுறை தேவை. இனி வரும்காலங்களில் இது போன்ற தொற்று ஏற்படாமல் இருக்க உலகளாவிய ஒற்றுமை இருக்க வேண்டும். இதில் வெளிப்படையான ஜனநாயக சமூகங்களுக்குச் சிறப்பு பொறுப்பு உள்ளது. ” என கூறியுள்ளார்.

”கொரோனா சிகிச்சை மருந்துகளுக்கான காப்புரிமையை தற்காலிகமாக ரத்து செய்யவும், கொரோனா சிசிக்கைக்கு தேவைப்படும் தொழில்நுட்பங்களுக்கு வர்த்தகம் சார்ந்த அறிவுசார் சொத்துரிமைகளுக்கான ஒப்பந்தத்தில் (டிரிப்ஸ்) இருந்து விலக்களிக்கவும் உலக வர்த்தக நிறுவனத்தில் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் பரிந்துரைத்துள்ளது. இதற்கு ஜி 7 கூட்டமைப்பு நாடுகள் ஆதரவளிக்க வேண்டும்” என பிரதமர் மோடி கோரியுள்ளார்.

 

கொரோனாவை எதிர்கொள்ள ஒரே பூமி, ஒரே சுகாதார அணுகுமுறை என்ற கொள்கை தேவை – ஜி 7 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி உரை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்