இந்தியா ஜி20 தலைமை பொறுப்பை ஏற்ற பிறகு மும்பையில் முதல் முறையாக அதன் மேம்பாட்டு செயற்குழு கூட்டம் நடக்கிறது. இன்று தொடங்கி 15-ம் தேதி வரை நடக்கும் இந்தக் கூட்டத்தில் ஜி-20 நாடுகளிலிருந்து குழுக்கள் வந்து கலந்து கொள்கிறது. அவர்கள் வந்து செல்லும் சாலைகளை மும்பை மாநகராட்சி நிர்வாகம் இரண்டு நாள்களாக சுத்தப்படுத்தி, அழகுபடுத்தி இருக்கிறது. அதோடு சாலையோரம் இருக்கும் குடிசைகள், சாக்கடைகள் வெளிநாட்டுக் குழுக்களுக்குத் தெரியாமல் இருப்பதற்காக வரவேற்பு பேனர்கள் மற்றும் துணியால் மூடி மறைத்திருக்கின்றனர்.
டிசம்பர் 16-ம் தேதி ஜி20 உறுப்பு நாடுகளின் குழுக்கள் போரிவலியில் உள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்காவிற்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கிருக்கும் கன்ஹரி குகைகள் சுற்றிக்காண்பிக்கப்படுறது. இதனால் அவர்கள் வந்து செல்லும் அனைத்து சாலைளும் சுத்தப்படுத்தப்பட்டு தண்ணீர் ஊற்றி கழுவி அழகுபடுத்தி இருக்கின்றனர்.
வாகனங்களை சிக்னல்களில் கட்டுப்படுத்தும் ஜிப்ரா கோடுகளைக்கூடப் புதிதாக போட்டிருக்கின்றனர். வெளிநாட்டுக்குழுக்கள் தங்கும் விடுதியைச் சுற்றி மட்டும் 4.50 கோடி செலவு செய்து அழகுபடுத்தப்பட்டிருக்கிறது. 3 நாள்கள் நடைபெறும் கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சி பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ வேல்டு சென்டரில் நடைபெறுகிறது. எனவே பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் சாலைகள் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளதோடு, தெருவோர கடைகள் எதுவும் இல்லாத வகையில் பார்த்துக்கொண்டனர். மொத்தம் 25 கோடி செலவு செய்து மும்பை மாநகராட்சி நிர்வாகம் வெளிநாட்டுக்குழுக்கள் வந்து செல்லும் பகுதிகளை அழகுபடுத்தி இருக்கிறது. பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் வழியாக ஓடும் சாக்கடை கலந்த மித்தி ஆற்றையும் வெளியில் தெரியாமல் மறைத்துவிட்டனர்.
இதற்கு முன்பு அகமதாபாத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்த போது சாக்கடைகள், குடிசைகள் சுவர் எழுப்பி மூடி மறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜி20 கூட்டத்தில் ஜி20 நாடுகளின் பருவநிலை மாற்றம், எரிசக்தி போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இது தவிர வேளாண்மை, கல்வி போன்ற அம்சங்கள் குறித்தும் விவாதிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Source : hindustantimes
நான் சொன்னா ஓட்டே போடமாட்டங்க | இதுல ரம்மி விளையாடுவாங்களா? | Aransei Roast | sarathkumar
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.