Aran Sei

‘பறையனிலிருந்து விஷ்வகுருவாக’ – பாஜக அண்ணாமலைக்கு வன்னியரசு கண்டனம்

மோடி இந்தியாவின் பிரதமராகி எட்டாண்டுகள் ஆகின்றன. இந்த எட்டாண்டு ஆட்சிக்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அந்த வாழ்த்தில் பறையனிலிருந்து விஷ்வகுருவாக என்று பதிவிட்டிருந்தார். இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த வன்னியரசு, துடியன்,பாணன் பறையன் கடம்பன் என்று இந்நான் கல்லது சிறந்த குடியும் இல்லை – மாங்குடி மருதனார். புறநானுற்றில் பெருமைப்படுத்தப்பட்ட பறையர்குடியை இழிவு படுத்தும் நோக்கத்தில் கடந்த காலத்தில் #InternationalParaiya என உளறிய சு.சாமி நிலை தான் அண்ணாமலைக்கும் நாளை ஏற்படும் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், பாப்பானுக்கே மூப்பான் பறையன், கேப்பார் இல்லாமல் கீழ் சாதியானான் என்பது முதுமொழி. சனாதனத்தை- வர்ணாசிரமத்தை ஏற்காத பறையர் குடியை ஒதுக்கி வைத்ததே இந்துத்துவம் தான். அப்படிப்பட்ட  மூத்த பறையர்குடியை இழிவுபடுத்தும்  சாதிய மனநோயாளி  அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

‘பறையனிலிருந்து விஷ்வகுருவாக’ – மோடிக்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை – இணையவாசிகள் கண்டனம்

முன்னதாக, மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளைப் பதிவிட்டுள்ளார். அதில்,

நம்பிக்கையின்மையிலிருந்து நம்பிக்கைக்கு,

குறுகிய மனப்பான்மையிலிருந்து தேசமே முதன்மையாக,

காலவிரயத்திலிருந்து  தீர்க்க முடிவுக்கு

குழுவிற்கானதாக  இருந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி,

பறையனிலிருந்து விஷ்வகுருவாக,

இருளிலிருந்து வெளிச்சத்திற்கு என்று தெரிவித்திருந்தார்.

Annamalai மாதிரி மிரட்டுன அரசியல்வாதிகள் காணாம போயிருக்காங்க

‘பறையனிலிருந்து விஷ்வகுருவாக’ – பாஜக அண்ணாமலைக்கு வன்னியரசு கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்