Aran Sei

இலவசங்கள் தமிழகத்தை ஏழையாக்கவில்லை: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட கடன் தள்ளுபடிகள் இலவசங்கள் இல்லையா – உச்சநீதிமன்றத்தில் திமுக கருத்து

லவசம் என்று அழைக்கப்படும் பொதுநல நடவடிக்கைகள், தமிழ்நாட்டை ஏழை மாநிலமாக மாற்றவில்லை என்று திராவிட முன்னேற்றக் கழகம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மாநில அரசுகள் வழங்கும் இலவசங்களை கட்டுப்படுத்துமாறு வழக்கறிஞரான அஸ்வினி குமார் உபாத்யாயை தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

மூத்த வழக்கறிஞரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான வில்சன், உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள விரிவான எழுத்துப்பூர்வ அறிக்கையில், இலவசத் திட்டங்கள் மக்களின் வருமான இடைவெளியைக் குறைத்து, மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளன தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவசம் தொடர்பான வழக்கு: கார்ப்பரேட்டுகளுக்கு ஒன்றிய அரசின் வரிச்சலுகை இலவசம் இல்லையா? – உச்சநீதிமன்றத்தில் திமுக மனு

மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தொழில் மயமாக்கலின் அடிப்படையில் தமிழ்நாட்டை முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாக மாற்றுவதற்கு இந்த திட்டங்கள் முக்கிய பங்காற்றியுள்ளதாகவும், சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் 18 தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இதன் காரணமாகவே, பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு புலம் பெயர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை 8.3% ஆக அதிகரித்துள்ளது. அதற்கு இலவச மருத்துவ வசதிகள் இணையற்றவை என்று உச்சநீதிமன்றத்தில் வில்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், மனுதாரரின் வழக்கறிஞரான அஸ்வினி குமார் உபாத்யாயை, “சமூக நலத் திட்டங்கள் எவ்வாறு ஒட்டுமொத்த சமுதாயத்தை உயர்த்தி, மக்களின் மகிழ்ச்சிக்குப் பங்களிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள சில ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ வேண்டும்” என்று வில்சன் கூறியுள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு இலவசக் கல்வியும் சுகாதாரமும் முக்கியம் – மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி

‘இலவசங்கள்’ என்பது எதிர்மறையான பொருளைக் கொண்ட கடுமையான பெயர் எனக் கூறிய வில்சன், பல நூற்றாண்டுகளாக உயர் சாதியினரின் சமூக மற்றும் பொருளாதார ஒடுக்குமுறையால் பின்தங்கிய நலிந்த பிரிவினரை சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உயர்த்துவதற்கான நலத்திட்டங்களே இவை எனக் குறிப்பிட்டார்.

மேலும், “பல நூறு ஆண்டுகளாக, சமூகத்தின் உயர்மட்டத்திலுள்ளவர்களுக்குக் கிடைத்த அதே வாய்ப்பு அவர்களின் குடும்பங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இது இலவசம் அல்ல, சமூக, பொருளாதார சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கான கருவி எனத் தெரிவித்துள்ள அவர் தமிழ்நாடு அரசு சமூக நீதி மற்றும் சமூக நல நடவடிக்கைகளில் முன்னணியில் உள்ளது” என எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதை எழுத்துப்பூர்வ அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில், அரசுக்குச் சொந்தமான பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் குறைந்த வருமானத்தைக் கொண்ட வீடுகளில், 12% வரை பணம் சேமிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக மூத்த வழக்கறிஞரும், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினருமான வில்சன் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு வரி விதித்து பணக்காரர்களுக்கு வரியை தள்ளுபடி செய்கிறது ஒன்றிய அரசு – அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

பாஜக அரசாங்கத்தின் முதல் மூன்று ஆண்டுகளில் அதானி குழுமத்தின் ரூ .72,000 கோடி மதிப்புள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், ரூ.9.92 லட்சம் கோடி கடன்கள் வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன, இதில் ரூ.7.27 லட்சம் கோடி பொதுத்துறை வங்கிகளில் இருந்து தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது கார்ப்பரேட்டுகளுக்கான இலவசங்கள் இல்லையா?” என்று திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த மனுவில், சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட “இலவசங்கள்” மீது மட்டுமே கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட மிக பெரிய அளவிலான கடன் தள்ளுபடிகள் மற்றும் வரி விலக்குகள் பற்றி அந்த மனு கவனத்தில் எடுத்துக் கொள்ள வில்லை என்று திமுக தெரிவித்துள்ளது.

Source : the hindu, the wire

Kallakurich sakthi internation school mysterious function | Nakkeeran Prakash spot report

இலவசங்கள் தமிழகத்தை ஏழையாக்கவில்லை: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட கடன் தள்ளுபடிகள் இலவசங்கள் இல்லையா – உச்சநீதிமன்றத்தில் திமுக கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்