மக்கள் என்னை தேசிய அரசியலுக்கு அழைக்கிறார்கள். உங்கள் (மக்கள்) ஆதரவுடன் தேசிய அரசியலுக்குச் செல்கிறேன். பாஜக இல்லாத பாரதத்துக்காக நாம் போராட வேண்டும் என்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
2024-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு மத்தியில் பாஜக அல்லாத அரசு ஆட்சிக்கு வரும். எங்களது மாநிலத்தைப் போன்று நாட்டையும் வளர்ச்சியடையச் செய்வோம். நாட்டில் எந்த மாநிலமும் விவசாயிகள் உட்பட அனைவருக்கும் 24 மணி நேரமும் மின்சாரம் கொடுப்பதில்லை. 2024-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு மத்தியில் எங்களது அரசு அமையும். விவசாயிகள் அனைவருக்கும் குறிப்பாக, பாஜக அல்லாத மாநிலங்களுக்கு 2024-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் கடனைத் தள்ளுபடி செய்து 12 லட்சம் கோடியை கொள்ளையடித்து விட்டனர். விவசாயத்துறையில் பிரச்னையை ஏற்படுத்தி நிலத்தை அபகரித்து கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கொடுக்க பாஜக அரசு முயல்கிறது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்துவிட்டது. எப்போதும் மக்களிடம் மதத்தின் பெயரால் வெறுப்புணர்வை ஏற்படுத்த முயல்கின்றனர். மக்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும். நமக்கு மாற்றம் தேவை” என்று சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
Source : news18
கேஸ் சிலிண்டரில் மோடி படம் | பாஜகவை அலற விடும் சந்திரசேகர் ராவ் | Aransei Roast | BJP | MODI | KSR
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.