Aran Sei

பாக்ஸ்கான் நிறுவனத்தில் குறைபாடு இருந்தது உண்மைதான் – ஒப்புக்கொண்ட ஆப்பிள் நிறுவனம்

சென்னை திருப்பெரும்பதூரில் உள்ள பாக்ஸ்கான் ஆலையின் வசதிகள் சரிபார்க்கப்பட்டு வருவதால் ஆலையின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பு ஆப்பிளின் கடுமையான தரநிலைகள் பூர்த்தி செய்யப்படும் என்று ஆப்பிள் நிறுவனத்தின் அமெரிக்கச் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு, சென்னையை அடுத்த திருப்பெரும்பதூரில் உள்ள ஆப்பிள் ஐபோன் தயாரிக்கும் பாக்ஸ்கான் ஆலையில் பணிபுரியும் பெண்கள் தங்கியிருந்த விடுதியில் வழங்கப்பட்ட உணவினால் 250 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனையொட்டி நூற்றுக்கணக்கான பாக்ஸ்கான் தொழிலாளர்கள் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பெரும்பதூரில் உள்ள ஆப்பிள் ஐபோனின்  உதிரிப்பாகங்களைச் பொருத்தும் பாக்ஸ்கான் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் தொலைதூர விடுதிகள்  மற்றும் சாப்பாட்டு அறைகளின் தரம் குறைவாக இருந்துள்ளன. ஆகவே இந்த குறைகளைக் களைய விரிவான நடவடிக்கைகளை விரைவாக எடுத்து வருவதாக ஆப்பிள் மற்றும் பாக்ஸ்கான் ஆகிய இரு நிறுவனங்களின் செய்தித் தொடர்பாளர்களும் நேற்று (29.12.2021) தெரிவித்துள்ளனர்.
மேலும் பாக்ஸ்கான் விடுதிகளின் நிலைமைகளைச் சோதிப்பதற்குத் தன்னிச்சையான தணிக்கையாளர்களை அனுப்பியுள்ளதாக ஆப்பிள் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
பாக்ஸ்கான் நிறுவனம் தனது அனைத்து முக்கிய ஆலைகளின் நிர்வாகத்தையும் சீர்செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அதுவரை அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியம் கொடுக்கவுள்ளதாக பாக்ஸ்கான் நிறுவனம் கூறியுள்ளது.
பாக்ஸ்கான் நிறுவனத்தில் குறைபாடு இருந்தது உண்மைதான் – ஒப்புக்கொண்ட ஆப்பிள் நிறுவனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்