அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுதல், சந்தையின் தரவுகளை தரகருக்கு வழங்க சந்தையின் கட்டமைப்பைச் சீர்குலைத்தது ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக 2018 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தேசியப் பங்குச்சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்னா, பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாகி ஆனந்த சுப்ரமணியன் ஆகியோருக்கு பிணை வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
தேசியப் பங்குச் சந்தையுடைய நிர்வாக இயக்குநரின் ஆலோசகர் மற்றும் குழு இயக்க அதிகாரியாக ஆனந்த சுப்ரமணியனை நியமிப்பதற்காக விதிமுறைகளை மீறியதற்காக சித்ரா ராமகிருஷ்ணா உள்ளிட்ட நிர்வாகிகளுக்குப் பிப் 11 தேதி இந்திய பங்குகள் பரிவர்த்தனை வாரியம் (செபி) அபராதம் விதித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து மும்பை மற்றும் சென்னையில் உள்ள சித்ரா ராமகிருஷ்ணாவிற்கு சொந்தமான இடங்கள் மற்றும் ஆனந்த் சுப்ரமணியனிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர்.
செபியின் புகாரைத் தொடர்ந்து வழங்கு பதிவு செய்து விசாரித்து வந்த சிபிஐ, விசாரணைக்கு ஆனந்த சுப்ரமணியன் ஒத்துழைக்கவில்லை என்று கைது செய்தது.
பங்குச்சந்தையின் செயல்பாடுகள் தொடர்பாக இமயமலையில் இருக்கும் சாமியார் ஒருவரிடம் ஆலோசனை பெற்றதன் மூலம் பங்குச்சந்தையின் ரகசியத்தன்மையை மீறியதோடு, அதிகார துஷ்பிரயோகத்தில் சித்ரா ராமகிருஷ்னா ஈடுபட்டுள்ளார் என பங்குச்சந்தைகள் மற்றும் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) குற்றம்சாட்டியிருந்தது. இதைத் தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டார்.
சித்ரா ராமகிருஷ்ணாவின் முறைகேடுகளை மறைத்த தேசிய பங்குச் சந்தை வாரியம் –செபி குற்றச்சாட்டு
தங்கள் இருவருக்கும் பிணை வழங்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் சித்ரா ராமகிருஷ்னா, ஆனந்த சுப்ரமணியன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
பிணை வழங்குவதற்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. “குற்றத்தின் தன்மை மிகவும் கடுமையானது என்று சிபிஐ வாதிட்டுள்ளது.
சிபிஐ வாதங்களை ஏற்ற நீதிமன்றம் தேசியப் பங்குச்சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்னா மற்றும் ஆனந்த சுப்ரமணியனுடைய பிணை மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
Source: newindianexpress
சர்வாதிகாரிகளுக்கு இது தான் நடக்கும் Sasikanth Senthil Interview | Srilanka Crisis |
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.