திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது ஒரு கூட்டத்தில் பேசிய அவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் அமமுக பொதுச்செயலாளர் சசிகலாவையும் கிண்டல் செய்யும் தொனியில் விமர்சித்திருந்தார்.
சசிகலாவின் காலில் முதல்வர் விழுந்ததை குறிப்பிட்டு பேசிய அவர், மிகவும் தரம்தாழ்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோ வைரலானதையடுத்து சமூக வலைதளங்களில் கடும் எதிர்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணி கட்சிகளைத் தவிர தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் உதயநிதியின் சர்ச்சை பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். சசிகலாவைக் கொச்சைப்படுத்தி பேசிய உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன.
உதயநிதியின் சர்ச்சைக்குரிய பேச்சை விமர்சித்து அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “கண்ணியத்திற்கும் தி.மு.கவுக்கும் ஒரு நாளும் சம்பந்தமே இருந்ததில்லை என்பதற்கு இது இன்னொரு சாட்சி. நெஞ்சம் முழுக்க அழுக்கும், துர்சிந்தனையும் நிரம்பிய ஒருவரால்தான் இப்படி வக்கிரமாக பேச முடியும். தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர் என்பதை மறந்துவிட்டு பேசியிருக்கிறார்” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட மிகப்பெரிய தலைவர்களை எல்லாம் இழிவுபடுத்தி பேசிய தீயசக்தி கருணாநிதியின் பேரன் என்பதை மு.க.ஸ்டாலினின் மகன் நிரூபித்திருக்கிறார். கண்ணியத்திற்கும் தி.மு.கவுக்கும் ஒரு நாளும் சம்பந்தமே இருந்ததில்லை என்பதற்கு இது இன்னொரு சாட்சி. (1/3)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 7, 2021
சசிகலா குறித்து அவதூறாக ஒன்றும் பேசவில்லை என்றும் இதனால் மன்னிபு கேட்க முடியாது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும், இதனால் யார் மனமாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக கூறியிருந்தார்.
சசிகலாவின் விடுதலை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது: எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் பழனிசாமி குறித்தும், சசிகலா குறித்தும் அவதூறு பேசியதாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜலட்சுமி என்பவர் அளித்த புகாரின் பேரில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சசிகலா விரைவில் விடுதலையா? – உண்மைத் தகவலைக் கூறிய உள்துறை செயலாளர் ரூபா
பெண்களையும், தமிழக முதல்வரையும் தரக்குறைவாக விமர்சித்து வரும் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சென்னை எம்எம்டிஏவில் நடந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கலந்துக் கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கட்சியின் தலைவராக இருந்தவர் சசிகலா. அவர் எங்கிருந்தாலும் நாங்கள் மரியாதையுடன் போற்றுவோம். ஜெயலலிதாவுடன் துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர். ஒரு பெண்ணை இது போன்று பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது” என்று கூறினார்.
’எங்கள் தோளில் ஏறி பயணிக்கும் தேசியக் கட்சிகளெல்லாம் ஒரு பொருட்டே இல்லை’ – கே.பி.முனுசாமி
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலா இம்மாதம் 27ஆம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், கோகுல இந்திராவின் பேச்சு அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.