Aran Sei

கைவிலங்குடன் ஆஜர்ப்படுத்தப்பட்ட உமர் காலித் – விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

Credit : The Hindu

டெல்லி கலவர வழக்கின் சதியில் தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்டுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் கையில் விலங்குடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு டெல்லி காவல்துறை ஆணையர் டெல்லி நீதிமன்றது உத்தரவிட்டுள்ளது.

உமர் காலித்தின் வழக்கறிஞர் திரிதீப் பைஸ், தாக்கல் செய்த மனுவை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி அமிதாப் ராவத் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கைவிலங்குடன் உமர் காலித்தை ஆஜர்படுத்துவதற்கு எதிராக அப்போதைய கூடுதல் அமர்வு நீதிபதி வினோத் யாதவ், கடந்த ஆண்டுல் ஏப்ரல் 22 ஆம் தேதியும், தலைமை பெருநகர் நீதிபதி பங்கஜ் சர்மா கடந்த ஆண்டு மார்ச் 7 மற்றும் இந்த ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதிகளும் உத்தரவுகள் பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உமர் காலித்தை கைவிலங்குடன் ஆஜர்படுத்திய குற்றசாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மீறுவதாகும் என திரிதீப் பைஸ் வாதிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அமிதாப் ராவத், “விசாரணை கைதிகளை கைவிலங்குடன்  ஆஜர்படுத்த வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரிலோ அல்லது கோரிக்கை வைத்த பிறகே, இது போன்ற கடுமையான நடைமுறைகளை பின்பற்றலாம்” என தெரிவித்துள்ளார்.

”உமர் காலித் மட்டுமல்ல டெல்லி கலவர வழக்கில் தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்ட எவருக்கும் கைவிலங்கிட நீதிமன்ற அனுமதி வழங்கவில்லை. மேலும், விசாரணை அமைப்பும் இது போன்ற எந்த ஒரு கோரிக்கையையும் வைக்கவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக டெல்லி காவல்துறையின் தலைமை இயக்குநருக்கும் (சிறைப்பிரிவு) நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Source : The Hindu

 

கைவிலங்குடன் ஆஜர்ப்படுத்தப்பட்ட உமர் காலித் – விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்