Aran Sei

இன்ஃபோசிஸ் முன்னாள் ஊழியர்கள் டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களில் வேலைக்கு சேர தடை – புதிய விதியை எதிர்க்கும் தொழிலாளர்கள்

ந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், தனது நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்த அனைத்து ஊழியர்களும் அடுத்த 6 மாதங்களுக்குள் அதன் போட்டியாளர்களாக டிசிஎஸ், விப்ரோ, காக்னிசன்ட், ஐபிஎம், அக்சென்சர் போன்ற ஐடி நிறுவனங்களில் வேலைக்குச் சேர கூடாது என்ற புதிய விதியை அமல்படுத்தியுள்ளது.

அமெரிக்கா நியூ ஜெர்சி: தொழிற்சங்கத் தேர்தலுக்கு மனுத் தாக்கல் செய்யவிருக்கும் அமேசான் தொழிலாளர்கள்

இன்ஃபோசிஸ் ஊழியர்களைப் போலவே, அவர்களின் வாடிக்கையாளர்களும் (clients) அடுத்த 6 மாதத்திற்குள் மேல கூறப்பட்டுள்ள ஐடி நிறுவனங்களில் பணியாற்ற முடியாது என்று அந்த புதிய விதி தெரிவித்துள்ளது.

இந்த புதிய விதி ராஜினாமா செய்த அல்லது ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ள ஊழியர்களைக் கவலைப்பட வைத்திருக்கிறது. ஏனெனில் இந்த புதிய விதி அதன் ஊழியர்களின் எதிர்கால விருப்பங்களைச் சுருக்குகிறது.

அமேசானில் தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சி தோல்வி – நிர்வாகத்தின் சூழ்ச்சி என்று வணிகர்கள் சங்கம் குற்றச்சாட்டு

நாசென்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி எம்ப்ளாய்ஸ் செனட் எனப்படும் பிரபல தகவல் தொழில்நுட்ப ஊழியர் சங்கம் இந்த புதிய விதிக்கு எதிராக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளது.

கடந்த 3 மாதங்களில் 80,000 க்கும் மேற்பட்ட இன்ஃபோசிஸ் ஊழியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். மற்ற முன்னணி ஐடி நிறுவனங்களிலும் இதே நிலைதான் உள்ளது. ஆகவே தங்களது ஊழியர்கள் ராஜினாமா செய்வதைத் தடுக்கும் நோக்கில் தான் இந்த புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

தொழிற்சங்கத்தை கண்டு அச்சம் கொள்கிறதா அமேசான்? – பணியாளர்களின் ஒற்றுமையைச் சிதைப்பதாக குற்றச்சாட்டு

இன்ஃபோசிஸ் ஊழியர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள இந்த புதிய விதி என்பது தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து படப்படும் கடுமையான அடக்குமுறையாகும். ஆகவே இந்த புதிய விதியை நீக்க வேண்டும் என்று நசென்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி எம்ப்ளாய்ஸ் செனட் தொழிற்சங்க தலைவர் ஹர்பிரீத் சலுஜா தெரிவித்துள்ளார்.

Source : trak

ஆரியத்தை எதிர்க்கும் Yuvan Shankar Raja திராவிடன் தான்

இன்ஃபோசிஸ் முன்னாள் ஊழியர்கள் டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களில் வேலைக்கு சேர தடை – புதிய விதியை எதிர்க்கும் தொழிலாளர்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்