Aran Sei

காவல்துறை வாகனத்திற்கு முறையாக எப்படி தீ வைப்பது என்பதே பாஜகவின் புதிய கல்விக் கொள்கையின் முதல் பாடம் – எம்.பி மௌவா மொய்த்ரா குற்றச்சாட்டு

credits : indian express

காவல்துறை வாகனத்திற்கு முறையாக எப்படி தீ வைப்பது என்பதே பாஜகவின் புதிய கல்விக் கொள்கையின் முதல் பாடம் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மௌவா மொய்த்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஊழல் செய்துள்ளதாக குற்றம் சாட்டி நேற்று (செப்டம்பர் 13) பாஜகவினர் ‘நபானா அபிஜான்’ என்ற பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்த பேரணியின் போது ஏற்பட்ட மோதலில் காவல்துறை வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்ய வந்த பெண் காவல் அதிகாரியிடம் “என் உடலைத் தொடாதே, நீ ஒரு பெண்” என்று பேசிய மேற்குவங்க பாஜக தலைவர் – திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கண்டனம்

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மௌவா மொய்த்ரா, “பாஜகவின் புதிய கல்விக் கொள்கையின் முதல் பாடம் எப்படி முறையாக காவல்துறை வாகனத்திற்கு தீவைப்பது என்பதே.மேற்கு வங்க அரசு யோகி ஆதித்யநாத் அரசின் கொள்கையை பின்பற்றி நேற்று பொதுத் சொத்துக்களை சேதப்படுத்திய பாஜகவினர் வீட்டிற்கு புல்டோசர்களை அனுப்பினால் என்னவாகும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த மோதல் குறித்து இளைஞர் காங்கிரஸின் தேசியத் தலைவர் பிவி ஸ்ரீனிவாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு வீடியோக்களை பகிர்ந்து பாஜக மீது குற்றம் சாட்டியுள்ளார்.

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நேர்ந்த கொரோனா மரணங்களை கணக்கிட வேண்டும்: ஒன்றிய சுகாதார அமைச்சகத்திற்கு நாடாளுமன்ற நிலைக்குழு கோரிக்கை

தனது முதல் ட்வீட்டில் காவி நிற டிசர்ட் அணிந்துள்ள ஒருவர் காவல்துறை வாகனத்தில் இருக்கும் துண்டில் தீவைக்கும் காணொளி ஒன்றை பகிர்ந்து, மேற்கு வங்கத்தில் காவல்துறை வாகனத்தை எரிக்கும் தேசிய கட்சியின் கலவரக்காரர்களை அடையாளம் காணுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு ட்வீடில், பாஜக கொடியுடன் இருக்கும் சிலர் காவல்துறை வாகனத்தை அடித்து நொறுக்கும் காணொளி ஒன்றை பகிர்ந்து, பிரதமர் மோடி, இந்தக் கலவரக்காரர்களின் உடை, கொடியினை வைத்து அவர்களை அடையாளம் கண்டு கொள்வார்கள். அவரது இதயம் அவர்களை ஒரு போதும் மன்னிக்காது என்று தெரிவித்துள்ளார்.

Source : hindustantimes

” I am not to answer to lies”, Srimathi’s Mother says | Kallakurichi Sakthi School Issue New update

காவல்துறை வாகனத்திற்கு முறையாக எப்படி தீ வைப்பது என்பதே பாஜகவின் புதிய கல்விக் கொள்கையின் முதல் பாடம் – எம்.பி மௌவா மொய்த்ரா குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்